தனியார் மருத்துவமனைக்கு மனைவியுடன் வந்த தல அஜித்.!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

0

Thala Ajith arrives at hospital with wife The video is viral on the website:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் அமர்க்களம், வாலி, முகவரி, காதல் கோட்டை, காதல் மன்னன், தீனா, மங்காத்தா, பில்லா, விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தீனா படத்தின் மூலம் ரசிகர்கள் அஜித்தை தல என செல்லமாக அழைத்து வந்தனர்.

தற்போது இவர் போனிகபூர் தயாரிக்கும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த  திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் பொதுவாக வெளியிடங்களுக்கு அதிகமாக செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதில்லை. இவர் இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் மருத்துவமனைக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்து சென்றுள்ளார். இவர் இந்த மருத்துவமனைக்கு யாரை பார்க்க வந்தார், எதற்காக வந்தார் என்ற எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இவர் மருத்துவமனைக்கு வந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.