அன்பைப் பொழிந்த ஏழை சிறுவனுக்கு லாரன்ஸ் என்ன செய்துள்ளார் பாருங்கள்.

Look at what Lawrence did to the poor boy who fell in love: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் லாரன்ஸ். இவர் இயக்குனர், நடிகர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஏழைகளுக்கு உதவுபவர், சமூக நலன் விரும்பி, என பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் 1963ல் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் பின்னணி நடன கலைஞராக அறிமுகமானார். மேலும் இதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு வெளியான பார்த்தேன் ரசித்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் 2011ல் வெளியான காஞ்சனா என்ற திரைப் படத்தின் வெற்றியின் மூலம் பல பாகங்களை எடுத்து உள்ளார். மேலும் இவர் தற்போது சந்திரமுகி 2 வில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஏழை எளிய மக்களுக்கு இவரது ஃபேன்ஸ் கிளப்பின் மூலம் இவர் உதவி செய்து கொண்டுவருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் அவர்கள் கொடுத்த உணவு பொட்டலத்தை வாங்கிக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த லாரன்ஸ் போஸ்டருக்கு முத்தம் கொடுத்த போட்டோ இணையதளத்தில் வைரலாகி வந்தது. “அந்த போட்டோவை பார்த்த லாரன்ஸ் எனக்கு விருது கிடைத்த உணவை கொடுக்கிறது.” என பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மூலம் அந்த சிறுவனை தேடி கண்டுபிடித்திருக்கிறார் லாரன்ஸ். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் “இந்த சிறுவனை பார்க்கும்போது சிறுவயதில் என்னை பார்த்தது போல இருக்கிறது. நானும் இதுபோல தான் கஷ்டமான சூழலில் வளர்ந்தேன். இந்த சிறுவனை காண ஆவலாக உள்ளேன். இவனுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டுமென” பதிவிட்டுள்ளார்.

Leave a Comment