இணையதளத்தில் வைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் !! மேக்கிங் வீடியோ.

0

karthik dial seitha en making video: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  விண்ணைதாண்டி வருவாயா. இத்திரைப்படத்தில் சிம்பு,  திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் விடிவி கணேஷ், சமந்தா, நாக சைதன்யா போன்றோர்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின்காரணமாக தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கௌதம் மேனன் சிம்பு, த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கு அவர் கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளார். இந்த குறும்படத்தின் டீஸார் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை அவர், அவர்களின் வீட்டில் இருந்தபடியே எடுத்துள்ளனர். எப்படி வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை எடுக்க முடியும் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில்  இருந்து உள்ளனர்.

ரசிகர்களின் இந்த குழப்பத்தில் போக்குவதற்காக தற்போது கௌதம் மேனன் மற்றும் சிம்பு எப்படி இதை சாத்தியப்படுத்த போகிறோம் என அவர்கள் பேசிக்  கொண்டிருக்கிறார்கள். இந்த குறும் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.