anithasampath-biggboss4

வெளிவந்தது இன்றைய முதல் ப்ரமோ!! அனிதா சம்பத்தின் இன்னொரு முகம் வெளியே வந்தது!! வைரலாகும் வீடியோ.

today biggboss 4 1st promo video: விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்கள். அடுத்தடுத்து என்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும் எனவும் பிக் பாஸ் என்ன சொல்லி குடும்பத்தில் கலவரத்தை உண்டு பண்ணுவார் என ரசிகர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து 2 நாட்களாக அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் விடாமல் சண்டையிட்டு வந்தார். பின்பு அவரே அவர் செய்த தவறை உணர்ந்து பயத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி தான் ப்ரமோவில் வரவேண்டும் என்பதற்காக தன்னை டிரக்கர் செய்வதாக கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் சுரேஷ் சக்கரவர்த்தியை பெரியவர் என கூட பார்க்காமல் மரியாதை இல்லாமல் வா போ என கண்டபடி பேசுகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த இன்றைய முதல் கட்ட ப்ரமோவில் அனிதா சம்பத் கதறி அழுகிறார்.

அதாவது நான் இந்த பெயர் புகழ் அனைத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு தான் சம்பாதித்தேன் இதை நான் கெடுக்க விரும்பவில்லை என அழுகிறார். அதுமட்டுமல்லாமல் யார் கூடவும் என்ன கம்பேர் பண்ணாதீங்க நான் எல்லாத்தையும் சகித்துக் கொண்டு போற பழக்கம் எனக்கு கிடையாது.

இப்படி அனிதா சம்பத் பேசி அழும் காட்சிகள் அவரது குணத்தை காட்டுகிறது. இதோ அந்த ப்ரமோ வீடியோ.

biggboss

வெளிவந்த இரண்டாவது ப்ரமோ!! அனிதா சம்பத்துக்கு என்னதான் ஆச்சு. !! ப்ரமோல வந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டாங்களா.

today biggboss 4 2 promo video:பிக்பாஸ் நிகழ்ச்சி பொறுத்தவரை ஹைலைட்டாக பேசப்பட வேண்டும் என்றால் யாருடனாவது மிகப்பெரிய அளவில் சண்டையிடனும் அப்பதான் அவங்க ஃபேமஸ் ஆவாங்க. ப்ரமோவிலும் வர முடியும் இதை தெரிந்துகொண்டே முதல்நாளே சண்டையிட ஆரம்பித்தார் அனிதா சம்பத்.

விளையாட்டாக நியூஸ் ரீடரை கிண்டல் செய்த சுரேஷ் சக்கரவர்த்தி அவரை விடாமல் வம்புக்கு இழுக்கும் அனிதா சம்பத். இன்று மீண்டும் அவருடன் வம்புக்கு இழுக்கிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு எனக்கூறி இனிமேல் என்னிடம் பேசாதே சண்டையிடாதே என கூறியும் விடாமல் வம்பு இழுக்கும் அனிதா சம்பத்.

அதற்காக ரேகா அவர்கள் சுரேஷ் இடம் போன போது போங்க சின்ன பொண்ணுதான் என சமாதானப்படுத்தினார். இன்றைய இரண்டாவது ப்ரமோவின் ஹைலைட்டே சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் சண்டை போட்டுக் கொள்வதுதான்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன தீராத சண்டையாக இருக்கும் போல கமல்லை வர சொல்லி  சீக்கிரம் குறும்படம் போட்டு காமியுங்கள் அனிதா சம்பத்க்கு என கூறுகின்றனர்.

இதோ அந்தப் ப்ரமோ வீடியோ.

biggboss-nomination

அடுத்தவார நாமினேஷன் இந்த நான்கு பேரா.? இதோ வெளியான ப்ரொமோ வீடியோ..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தது என்ன நடக்கும் என நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக நேற்று பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மெட்கள் தங்கள் வாழ்நாளில் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி கூறுகின்றனர். அப்படிக் கூறும்போது வேல்முருகன் தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டத்தை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார் என கூறும் போது அதனைக் கேட்டதும் அனைவரும் அழுது விடுகின்றனர்.

அவரை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி அவருக்கு நடந்த விபத்து பற்றி கூறுகிறார் மிக கொடுமையாக இருந்தது. அது தொடர்ந்து இன்று சற்று முன்பு வெளிவந்த ப்ரமோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் பேசும்போது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது என தெரிவிக்கிறார். மேலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ரேகா, சம்யுக்தா ஆகிய நால்வரும் தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும் இவர்களில் ஒருவர் பார்வையாளர்களின் வாக்களிப்பின் படி எலிமினேஷன் ஆவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டது.

இதோ அந்த ப்ரமோ.

biggboss-4-anitha1

குறும்படம் போட சொல்லி கேட்கும் அனிதா சம்பத் !! வைரலாகும் வீடியோ.

anitha sampath: இன்று வெளியான முதல் ப்ரமோவில்  ஷிவாணியை கார்னர் செய்யும் ஹவுஸ் மெட்கள். ஷிவானியுடன் ஆறுதலாக பேசும் ஆரி, ஜித்தன் ரமேஷ் மற்றும் சம்யுக்தா. மேலும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரமோ வெளியானது அதில் அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம் அழுது கொண்டு பேசுகிறார்.

அதாவது அவருக்கு நிஷாவை ரொம்ப பிடிக்குமாம் காரணம் அவர் அம்மாவும் நிஷாவை போல கருப்பாகத்தான் இருப்பாராம். அதோடு மட்டுமல்லாமல் அவர் நகை கூட போடமாட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் தான் கருப்பாக இருக்கிறோம் என்று மிகவும் தாழ்வு மனப்பான்மை யோடும் இருப்பாராம். நீங்கள் மிகவும் தைரியமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மற்றவர்களையும் ரசிக்க வைக்கிறீர்கள். என் அம்மாவும் உங்களிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது வெளிவந்த அடுத்த ப்ரமோவில் அனிதா சம்பத் சுரேஷிடம் சண்டை போடுவது போன்ற காட்சி வெளியானது. அதாவது சண்டைக்கான காரணம் என்னவென்றால் சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத்திடம் பேசும்போது பொதுவாகவே நான் செய்திவாசிப்பாளர்களிடம் பேசுவது இல்லை அவர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் என சொன்னதாக அனிதா சம்பத் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி நான் அப்படி கூறவே இல்லை என கூறுகிறார். அதற்காக அனிதா சம்பத் குறும்படம் போட்டுப் பார்ப்போம் என சொல்கிறார். அதைக் கேட்ட சுரேஷ் குறும்படம் என்ன பெரும் படம் கூட போட்டு பாருங்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ.

biggboss-4-anitha-sambath

கதறி கதறி அழும் அனிதா சம்பத்.! காரணம் அறந்தாங்கி நிஷாவா.? வைரலாகும் வீடியோ

bigboss day 2 anitha sambath crying to nisha 2 nd promo video viral: இன்றைய பிக்பாஸிலன் இரண்டாம் கட்ட ப்ரமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரமோவில் பிரபல செய்தி வாசிப்பாளரான இளைஞர்களை கவர்ந்த அனிதா சம்பத் கண்ணீர் விட்டு பேசும் புதிய பிரமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரமோவில் அறந்தாங்கி நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல் உள்ளார் என் அம்மாவும் கருப்பாக தன் இருப்பாங்க. இதனாலேயே அவங்க நகை எதுவும் போட மாட்டாங்க. போட்டா இன்னும் அவங்க கருப்பா இருப்பாங்க அப்படி இருப்பதாலேயே நகை போடுவது இல்லை.

எங்க அம்மா நிஷா அக்கா கிட்டருந்து கத்துக்கணும். அவங்க கருப்பா இருக்குறதால ரொம்ப இன்பிரியரா ஃபீல் பண்ணுவாங்க. ஆனால் நிஷா அக்கா அப்படி எல்லாம் இல்லாம ரொம்ப போல்ட்  சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்காங்க அதனாலேயே  அவங்களை எனக்கு பிடிக்கும் எனக்கூறி அழுதுகொண்டே பேசியுள்ளார்.

இதோ அந்தப் ப்ரமோ வீடியோ.

biggboss4-aari-shivani

சோகத்தில் ஷிவானி!! ஆறுதல் சொல்லும் ஆரி மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியானது இன்றைய முதல்கட்ட ப்ரோமோ!!

biggboss season 4, 2day 1st promo housemates target shivanni narayanan video:விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக தொடங்கி ஒரு நாள் முடிவடைந்த நிலையில் இன்னைக்கு என்ன நடக்கும், எப்போது ப்ரோமோ வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். பிக்பாஸ் அப்டேட்டை தெரிந்து கொள்ள ரசிகர்கள் போனும் கையுமாகவே சுற்றுவார்கள்.

மேலும் குறிப்பாக வீட்டிலுள்ளவர்கள், வேலையில் இருப்பவர்கள் என அனைவருமே தற்போது பெருமளவில் விரும்பி பார்ப்பது பிக் பாஸ். இந்த வீட்டில் அடுத்தது சுவாரஸ்யமான விஷயம் என்ன நடக்குமென ஆவலாக பார்த்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ரியோ,  அறந்தாங்கி நிஷா, அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ், ஆரி போன்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இன்று வெளியான முதல் கட்ட ப்ரமோவில் ஷிவானி நாராயணனை வீட்டிலுள்ள மற்ற ஹவுஸ் மெட்டுகள் குறைகூறி வருகின்றனர். அதனால் ஷிவானி வருத்தத்தில் உள்ளார் அதற்கு ஜித்தன் ரமேஷ், ஆரி போன்றோர் ஷிவானிக்கு ஆறுதலாக பேசி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ப்ரமோ.

பிக் பாஸ் பாருங்கள் என கமல் போலவே பார்வையால் பேசும் சிவானி!! வைரலாகும் வீடியோ.

shivani narayanan like kamal she speaks gesture in watch biggboss video viral:உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் தற்போது மிக ஆர்வமாக பார்த்து வருவது பிக் பாஸ். இந்த சீசனில் சீரியல் நடிகையும் மாடலுமான ஷிவானி நாராயணன் கலந்துகொண்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இவர் என்ட்ரியே பக்கா மாசாக  ஹாட் பர்பாமன்ஸ் உடன் தெறிக்கவிடும் அளவு இருந்தது.

மேலும்  பிக்பாஸ் வீட்டில் பலரும் இவருக்கு ஹார்ட் புரோக்கன் சிம்பல் ஸ்டாம்பை கொடுத்தனர். இவர் யாருடனும் நெருங்கிப் பழகாமல் தனிமையில் இருந்ததற்காக இப்படிக் கொடுக்கப்பட்டது என அவர்கள் காரணம் கூறினார்கள்.

இப்படி அனைவருமே ஷிவானிக்கு இந்த சிம்புலை கொடுத்து அவரை டார்கெட் செய்வது போன்று தெரிந்தது. வயதில் சிறிய பெண்ணான சிவானியை அனைவரும் டார்கெட் செய்வதால் அவர் மனமுடைந்து சோர்ந்து போய் நிற்பது போன்று  தெரிந்தது.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் கமல் போலவே செய்கையாலே தொடர்ந்து பிக்பாஸ் பாருங்கள் என இரண்டு கண்களை நோக்கியும் பார்வையாளர்களை நோக்கியும் காட்டும் சிவானி பின்னர் கமல் போலவே காண்பித்து வெட்கத்தில் சிரிக்கும். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருவதை பார்த்த ரசிகர்கள் சிலர் லாஸ்லியா சாயலில் இருக்கிறது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் சிலர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே என்ன 100 நாட்களுக்கும் தேவையான போஸ்ட்களை ஷெட்யூலில் போட்டுவிட்டார் போல எனவும் தினமும் இப்படி ஏதாவது போடுங்க எனவும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ.shiva

https://www.instagram.com/p/CF8s72rHXm7/?utm_source=ig_web_copy_link

nisha

3வது ப்ரமோ வெளியானது!! அறந்தாங்கி நிஷாவுக்கு என்ன ஆயிற்று!! வைரலாகும் வீடியோ.

3rd promo video: இன்று பிக் பாஸ் சீசன் 4 முதல் நாள் வெற்றிகரமாக 14 நாட்கள் ஹோட்டல் அறையில் தனித்து வைக்கப்பட்டு கொரோனா தொற்று ரிசல்ட் எடுக்கப்பட்டு பிறகு 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

காலையிலேயே முதல் ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது. முதல் பிரமோவில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர்-நடிகைகள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக டான்ஸ் ஆடி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் பாத்ரூமில் ஜாலியாக டான்ஸ் ஆடினார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் தான் இந்த வருடத்தில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்வார்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு ரம்யா பாண்டியன் டான்ஸ் ஆடும்போது பிளையிங் கிஸ் கொடுத்தார். எனவே அதற்காக ரசிகர்கள் இவருக்கு சீக்கிரமாக ஆர்மி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரோம் ஒன்று வெளியானது. இந்தப் ப்ரமோவில் சிவானி நாராயணனை வீட்டிலுள்ளவர்கள் டார்கெட் செய்வது போன்று காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சனம் ஷெட்டி, சிவானி நாராயணனை பார்த்து உங்களுக்கு இங்க இருக்க எந்த தகுதியும் இல்லை என கூறுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி நிஷா ஓடிக் கொண்டிருக்கும் போது கீழே தடுக்கி விழுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அவரைப் பார்த்து ரியோ சிரிப்பது போல இருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.