வெளிவந்தது இன்றைய முதல் ப்ரமோ!! அனிதா சம்பத்தின் இன்னொரு முகம் வெளியே வந்தது!! வைரலாகும் வீடியோ.

0

today biggboss 4 1st promo video: விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்கள். அடுத்தடுத்து என்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும் எனவும் பிக் பாஸ் என்ன சொல்லி குடும்பத்தில் கலவரத்தை உண்டு பண்ணுவார் என ரசிகர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து 2 நாட்களாக அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் விடாமல் சண்டையிட்டு வந்தார். பின்பு அவரே அவர் செய்த தவறை உணர்ந்து பயத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி தான் ப்ரமோவில் வரவேண்டும் என்பதற்காக தன்னை டிரக்கர் செய்வதாக கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் சுரேஷ் சக்கரவர்த்தியை பெரியவர் என கூட பார்க்காமல் மரியாதை இல்லாமல் வா போ என கண்டபடி பேசுகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது வெளிவந்த இன்றைய முதல் கட்ட ப்ரமோவில் அனிதா சம்பத் கதறி அழுகிறார்.

அதாவது நான் இந்த பெயர் புகழ் அனைத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு தான் சம்பாதித்தேன் இதை நான் கெடுக்க விரும்பவில்லை என அழுகிறார். அதுமட்டுமல்லாமல் யார் கூடவும் என்ன கம்பேர் பண்ணாதீங்க நான் எல்லாத்தையும் சகித்துக் கொண்டு போற பழக்கம் எனக்கு கிடையாது.

இப்படி அனிதா சம்பத் பேசி அழும் காட்சிகள் அவரது குணத்தை காட்டுகிறது. இதோ அந்த ப்ரமோ வீடியோ.