அடுத்தவார நாமினேஷன் இந்த நான்கு பேரா.? இதோ வெளியான ப்ரொமோ வீடியோ..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தது என்ன நடக்கும் என நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக நேற்று பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மெட்கள் தங்கள் வாழ்நாளில் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி கூறுகின்றனர். அப்படிக் கூறும்போது வேல்முருகன் தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டத்தை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார் என கூறும் போது அதனைக் கேட்டதும் அனைவரும் அழுது விடுகின்றனர்.

அவரை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி அவருக்கு நடந்த விபத்து பற்றி கூறுகிறார் மிக கொடுமையாக இருந்தது. அது தொடர்ந்து இன்று சற்று முன்பு வெளிவந்த ப்ரமோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் பேசும்போது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது என தெரிவிக்கிறார். மேலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ரேகா, சம்யுக்தா ஆகிய நால்வரும் தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும் இவர்களில் ஒருவர் பார்வையாளர்களின் வாக்களிப்பின் படி எலிமினேஷன் ஆவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டது.

இதோ அந்த ப்ரமோ.

Leave a Comment