எனக்கு தினமும் இரண்டு முட்டை வேண்டும் ரம்யாவிடம் கோரிக்கை வைத்த பிக் பாஸ் போட்டியாளர்.! Unseen வீடியோ

0

பிக்பாஸ் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது, கடந்த இரண்டு மூன்று நாட்களிலேயே சண்டைகள் சென்டிமென்ட் எனக் களைகட்ட ஆரம்பித்துவிட்டது, மேலும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் 3 நாட்களை கழித்து உள்ளார்கள்.

இதில் அவர்களின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்த்து வருகிறது, இந்த வாரம் பிக்பாஸ் தலைவராக இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இந்த வாரத்தில் எலிமினேஷன் எதுவும் இல்லை என்றாலும் அடுத்த வாரம் எலிமினேஷன் இருப்பதால் கொஞ்சம் போட்டியாளர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் டிவியில் ஒளிபரப்பான காட்சிகளை ஹாட்ஸ்டாரில் அன்சீன் வீடியோ என்ற பெயரில் ஒளிபரப்பினார்கள் ஆனால் இந்த வருடம் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பி வருகிறார்கள் இந்த சேனல் கடந்த 4ஆம் தேதி தான் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வாரம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ரம்யா பாண்டியனிடம், யார் வீட்டை பராமரிப்பது, யார் சமைப்பது, யார் டாய்லெட் கிளீன் பண்ணுவது என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ரேகா ரம்யாவிடம் எனக்கு தினமும் இரண்டு முட்டை வேண்டும் என கூறியுள்ளார்.

இதை பார்த்தால் கடந்த 2017 ஆவது வருடத்தில் ஒளிபரப்பப்பட்ட பிக்பஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வெங்கட்ராமன் பற்றி தான் நினைவுக்கு வருகிறது என்றால் அவர்தான் முட்டைக்காக பல கேள்விகளை கேட்டுளளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த போட்டியில் வெங்கட்ராமனாக ரேகா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.