பிக்பாஸ் வீட்டில் இன்று அதிரடியாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

0

today famous serial actress entry in biggboss house photo viral: பிக் பாஸ் சீசன் 4 அதிரடியாக நேற்று போட்டியாளர்களின் அறிமுகவிழா சிறப்பாக தொடங்கியது. மேலும் இன்று முதல் எபிசோடை குறித்து முதல் ப்ரமோ வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் நடிகர் நடிகைகள் என அனைவரும் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு மிகவும் சந்தோஷமாக டான்ஸ் ஆடுவது காண்பிக்க பட்டிருந்தது.

அதில் கேப்ரில்லா பாட்டின் மெட்டுக்கு ஏற்ப மிக அழகாக ஆடி இருந்தார். அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியன் ப்ளையிங் கிஸ் கொடுத்தார். எனவே வலைத்தளத்தில் இவர்களில் யாருக்கு முதலில் ஆர்மி ஆரம்பிப்பது என இப்போதே ரசிகர்கள் போட்டி போட ஆரம்பித்துவிட்டனர்.

அதனைதொடர்ந்து இரண்டாவது ப்ரமோ வீடியோ வெளியானது. இந்த காட்சியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் சிவானி நாராயணனை டார்கெட் செய்வது போன்று காண்பிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியும், சனம் ஷெட்டிக்கும் ஷிவானி நாராயணனை உனக்கு எங்கெல்லாம் இருக்க தகுதியில்லை என கூறி டார்கெட்  செய்வது போல காண்பிக்க பட்டிருந்தது.

அதனைதொடர்ந்து தற்போது பிரபல சீரியல் நடிகை இந்த வீட்டிற்குள் அதிரடியாக களம் இறங்கியுள்ளார். அதாவது சில நாட்களாக விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கையில் பையை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக சுற்றுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

எனவே அவர் கடைசியாக வேறு எங்கும் போக வழியில்லாமல் பிக் பாஸ் வீட்டிற்கு போவது போன்று புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

bigboss serial actress
bigboss serial actress