குறும்படம் போட சொல்லி கேட்கும் அனிதா சம்பத் !! வைரலாகும் வீடியோ.

0

anitha sampath: இன்று வெளியான முதல் ப்ரமோவில்  ஷிவாணியை கார்னர் செய்யும் ஹவுஸ் மெட்கள். ஷிவானியுடன் ஆறுதலாக பேசும் ஆரி, ஜித்தன் ரமேஷ் மற்றும் சம்யுக்தா. மேலும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரமோ வெளியானது அதில் அனிதா சம்பத் அறந்தாங்கி நிஷாவிடம் அழுது கொண்டு பேசுகிறார்.

அதாவது அவருக்கு நிஷாவை ரொம்ப பிடிக்குமாம் காரணம் அவர் அம்மாவும் நிஷாவை போல கருப்பாகத்தான் இருப்பாராம். அதோடு மட்டுமல்லாமல் அவர் நகை கூட போடமாட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் தான் கருப்பாக இருக்கிறோம் என்று மிகவும் தாழ்வு மனப்பான்மை யோடும் இருப்பாராம். நீங்கள் மிகவும் தைரியமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மற்றவர்களையும் ரசிக்க வைக்கிறீர்கள். என் அம்மாவும் உங்களிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது வெளிவந்த அடுத்த ப்ரமோவில் அனிதா சம்பத் சுரேஷிடம் சண்டை போடுவது போன்ற காட்சி வெளியானது. அதாவது சண்டைக்கான காரணம் என்னவென்றால் சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத்திடம் பேசும்போது பொதுவாகவே நான் செய்திவாசிப்பாளர்களிடம் பேசுவது இல்லை அவர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் என சொன்னதாக அனிதா சம்பத் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி நான் அப்படி கூறவே இல்லை என கூறுகிறார். அதற்காக அனிதா சம்பத் குறும்படம் போட்டுப் பார்ப்போம் என சொல்கிறார். அதைக் கேட்ட சுரேஷ் குறும்படம் என்ன பெரும் படம் கூட போட்டு பாருங்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ.