3வது ப்ரமோ வெளியானது!! அறந்தாங்கி நிஷாவுக்கு என்ன ஆயிற்று!! வைரலாகும் வீடியோ.

0

3rd promo video: இன்று பிக் பாஸ் சீசன் 4 முதல் நாள் வெற்றிகரமாக 14 நாட்கள் ஹோட்டல் அறையில் தனித்து வைக்கப்பட்டு கொரோனா தொற்று ரிசல்ட் எடுக்கப்பட்டு பிறகு 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

காலையிலேயே முதல் ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது. முதல் பிரமோவில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர்-நடிகைகள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக டான்ஸ் ஆடி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் பாத்ரூமில் ஜாலியாக டான்ஸ் ஆடினார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் தான் இந்த வருடத்தில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்வார்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு ரம்யா பாண்டியன் டான்ஸ் ஆடும்போது பிளையிங் கிஸ் கொடுத்தார். எனவே அதற்காக ரசிகர்கள் இவருக்கு சீக்கிரமாக ஆர்மி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரோம் ஒன்று வெளியானது. இந்தப் ப்ரமோவில் சிவானி நாராயணனை வீட்டிலுள்ளவர்கள் டார்கெட் செய்வது போன்று காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சனம் ஷெட்டி, சிவானி நாராயணனை பார்த்து உங்களுக்கு இங்க இருக்க எந்த தகுதியும் இல்லை என கூறுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி நிஷா ஓடிக் கொண்டிருக்கும் போது கீழே தடுக்கி விழுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அவரைப் பார்த்து ரியோ சிரிப்பது போல இருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.