நான்கு மணி பிட்டு போஸ்டர் பற்றி கேட்ட போட்டியாளர்.! திருட்டுப் பூனை மாதிரி திருதிருன்னு முழிச்ச ஷிவானி நாராயணன்.

0

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ், தற்பொழுது இதன் நான்காவது சீசன் தொடங்கியுள்ளது, இந்த சீசனில் வழக்கம்போல் 16 போட்டியாளர்கள் களத்தில் குதித்துள்ளார், இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஆரம்பித்த இரண்டு நாட்கள் ஆன நிலையில், பிக்பாஸ் வீடு இரண்டாக பிரியும் அளவிற்கு சண்டைகள் ஆரம்பித்துவிட்டன, இதற்கு முந்தைய சீசனில் வனிதா எப்படி வாயாடியாக இருந்தாரோ அதேபோல் இந்த சீசனில் அதேபோல் கேரக்டர் ஒருவர் அமைந்துள்ளார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் சென்டிமென்ட் சண்டை என களை கட்டி வருகிறது, அதிலும் கார்டனில் நடிகர் ஆரி  பேசிய பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது அதனால் ரசிகர்கள் ஆர்மி தொடர ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் சமூக வலைத்தளத்தல் மிகவும் பிரபலமானவர் என்றால் அது ஷிவானி நாராயணன் தான் இவரின் ரசிகர்கள் ஏற்கனவே ஆர்மியை தொடங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் நடிகர் ஆரி சிவானி யை பார்த்து எதற்கு 4 மணிக்கு பிட்டு போஸ்ட் போடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார் அதற்கு ஷிவானி நாராயணன் திருதிருவென முழித்தார், அதன்பிறகு ஆரி ஒரு செலிபிரிட்டி ஆக தான் இப்படி செய்கிறீர்கள் அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது இங்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யாரை வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்த்து விட்ட அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பார்கள் அதனால் கொஞ்சம் கவனத்துடன் விளையாடுங்கள் என கூறியுள்ளார்.