nayanthara

நயன்தாரா போலவே இருக்கும் பெண் tik tok செய்து அசத்தியுள்ளார்.! அதுவும் அவரது வசனத்துக்கே.! இதோ வீடியோ.

சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்பொழுது அவர் அண்ணாத்தா, நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்து வருகிறார் மேலும் அவர் ஆர் ஜே பாலாஜி அவர்களுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தற்போதைய தமிழ் சினிமா உலகில் நடிகர்களுக்கு ஈடு இணையாக சென்று கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் ஒரு பெண் டிக் டாக் செய்து அசத்தியுள்ளார் அதுவும் நயன்தாரா வசனத்தையே அவர் அவரும் டிக் டாக் செய்துயுள்ளார் அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இந்தியா அரசு சமிபத்தில் சீனாவின் பல app களை தடைசெய்துள்ளது அதிலும் முதன்மையானதாக இருக்கும் டிக் டாக் app – யும் தற்பொழுது தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்து வீடியோ.

raizawilson-tamil360newz

டிக் டாக்கில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம் வைரலாகும் வீடியோ!!

bigboss actress tiktok video: ரைசா வில்சன் விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1னில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் ஒரு மாடலிங் அழகி மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே போன்ற திரைப்படங்களில்  ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தற்போது காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், #love, எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே உள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகை ரைசா வில்சனும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது டிக்டாக்கில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

david-warner

250k லைக்குகளை கொடுத்தால் mind block பாடலுக்கு நடனம் ஆடிய டேவிட் வார்னர்.! ரிகர்சல் மட்டும் 50 முறையா.!

சினிமாவில் எடுத்து வரும் பாடல்கள் திரையரங்கில் வெளிவந்து ஹிட் அடிக்கிறதோ இல்லையோ டிக் டாக்கில் ஹிட்டடித்து வருகிறது.டிக்டாக்கில் ஹிட் அடிக்க அந்தப் பாடலை மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக டிக் டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

குறிப்பாக குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவிகள் தொடங்கி தற்போது முன்னணி பிரபலங்கள் வரை பலர் பயன்படுத்தி வருகின்றனர் அந்தவகையில் ஆஸ்திரேலிய இடது கை அதிரடி மன்னன் டேவிட் வார்னர் அவர்கள் சமீபகாலமாக டிக் டாக்கை பயன்படுத்தி வருகிறார் அவர் தனது குடும்பத்துடன் இணைந்து நடனமாடுவது, பாட்டு பாடுவது போன்ற பலவகையான வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளிய வந்தார்.

இதனையடுத்து டிக் டாக் கை அதிகமாக பயன்படுத்த தொடங்கினார் இந்த நிலையில்  டேவிட் வார்னர் அல்லு அர்ஜுனின் முட்டபொம்மா பாடலுக்கும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி என்ற பாடலுக்கும் நடனமாடி இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனையடுத்து ரசிகர்கள் டேவிட் வார்னர் இடம் தெலுங்கு ரசிகர்கள் மகேஷ்பாபுவின் mind block பாடலுக்கு நடனமாட வேண்டும் என கூறியுள்ளனர் இதனை ஏற்றுக்கொண்ட டேவிட் வார்னர் நீங்கள் முதலில் எனக்கு 250k லைக்குகளை கொடுத்தால் நான் நடனம் ஆடுவேன் என கோரிக்கை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அவர் mind block பாடலுக்கு தனது மனைவியுடன் இணைந்து டிக்டாக்கில் ஆடியுள்ளார். டேவிட் வார்னர் இந்த பாடலுக்காக 50 தடவை முயற்சி செய்து உள்ளார் அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.