டிக் டாக் இழுத்து மூடிய ஒரு மணி நேரத்தில் சிங்காரி படைத்த சாதனை.! யாருகிட்ட வச்சிகிரிங்க அப்டியே ஓடிடுங்க

பிரபல வீடியோ பகிர்வு செயலி டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது, இந்தநலையில் சிங்காரி மற்றும் மிட்ரான்  போன்ற செயலிகள் நாட்டில் மிகவும் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தநிலையில் சிங்காரி செயலின் இணை நிறுவனரும் தலைமை தயாரிப்பு அதிகாரியுமான சுமித் கோஸ் தலைவர் டுவிட்டரில் இந்த செயலி ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பதிவிறக்கங்கள் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் டிக்டாக் மாற்று செயலியான சிங்காரி கூகுள் பிளே ஸ்டோரில் 25 லட்சம் பதிவிரக்கங்களை தாண்டிவிட்டது எனவும் தெரிகிறது, அதுமட்டுமில்லாமல் வெறும் பத்தே நாட்களில் ஆறு லட்சத்திலிருந்து 25 லட்சம் பதிவிறக்கங்களை எட்டியுள்ளது. என இந்த நிறுவனம் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் ஐந்தில் 4.7 என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது அசல் இந்திய குறுகிய வீடியோ செயலி எனவும் அழைக்கப்படுகிறது, இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் மூலமாகவும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிங்காரி செயலி  டிக் டாக் உடன் போட்டி போட உருவாக்கப்பட்ட செயலி ஆகும். இந்த செயலியை பெங்களூரை சேர்ந்த 2 புரோகிராமர் களான பிஷ்வத்மா  நாயக் மற்றும் சித்தார்த் ஆரியர்களால் உருவாக்கப்பட்டது இந்த செயலி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ios ல் அறிமுகப்படுத்தப்பட்டது அதேபோல் 2018 ஆம் ஆண்டு நவம்பரில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைத்தது.

சிங்காரி செயலியை இலவசமாக பத்திவிறக்கம்செய்யலாம் அதுமட்டுமில்லாமல் பயனர்கள் குறுகிய வீடியோக்களை பார்க்கவும் பகிரவும் செய்யலாம், இந்த செயலியை இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் கிடைக்கிறது. டிக் டாக் இடத்தை இந்த சிங்காரி செயலி நிரப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த சில நாட்களாக இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதிலிருந்து பார்க்கப்பட்டால் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என தெரிகிறது, சீன செயலியை முடங்கியதால் இந்திய செயலியான சிங்காரி செயலி நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல் டிக்டாக்கின் போட்டியாளரான மிட்ரா செயலியும்  கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களை பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment