aliya-manasa

கிடுகிடுவென வளர்ந்துள்ள சீரியல் நடிகை ஆலியா மனசாவின் மகன்.! வைரல் வீடியோ..

சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. சொல்லப்போனால் வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகள் தான் விரைவில் தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகின்றனர். மேலும் ஏராளமான நடிகைகள் தாங்கள் அறிமுகமான முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் இருக்கின்றனர் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஆலியா மானசா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இதற்கு நடிகர் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாக இவர்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலிக்கு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தற்போது இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நடிகை ஆலியா மானசாவின் வீட்டில் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் திடீரென யாருக்கும் தெரியாமல் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவரை அடுத்து ஆலியா மானசா ராணி சீரியலின் இரண்டாவது பாகத்தில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது முறையாக இவருக்கு குழந்தை பிறந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். பிறகு குழந்தை பிறந்தவுடன் விஜய் டிவியில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சன் டிவியில் புதிதாக அறிமுகமான இனியா தொடரில் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் இனியா தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு காலில் அடிபட்டதால் ஆபரேஷனும் செய்துள்ளார். இவ்வாறு சீரியல்களில் அடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சொந்தமாக யூடியூப் சேனலை ஒன்றையும் நடத்திவரும் நிலையில் அதில் தொடர்ந்து தன்னுடைய குழந்தைகள் குறும்பு செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகனுடன் இருக்கும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் அதற்குள் ஆலியாவின் மகன் இப்படி வளந்துட்டாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.