கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த பழனிச்சாமி அம்மா.. பாக்யாவை பற்றி அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் இனியா பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு..

Baakiyalakshmi: இன்றைய எபிசோடில் பாக்யாவும் பழனிச்சாமியும் இங்கிலீஷ் கிளாசில் இருந்து வெளியே வருகின்றனர் அப்பொழுது கோபியும் அங்கு வருகிறார். அவரிடம் பாக்கியா நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கேட்க நீ பண்ற தில்லாலங்கடி வேலைய பாக்க தான் வந்தேன் என பாக்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார் அப்போது பழனிசாமி நீங்க போங்க நான் பேசுகிறேன் என்று சொல்ல பாக்கியாவும் கிளாசுக்கு போறாங்க..

பிறகு பழனிச்சாமி கோபியிடம் நாலு பேர் வந்து படிக்கிற இடம் இங்க வந்து சண்டை போடலாமா, அப்படி சண்டை போட்டா அடுத்து போலீஸ் வருவாங்க அப்புறம் போலீஸ் கிட்ட பாக்யா இவங்க யாருன்னு தெரியாது என்று சொல்லுவாங்க போலீஸ் உங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போவாங்க இதெல்லாம் தேவையா என்று பழனிச்சாமி கேட்க பிறகு கோபி கிளம்பிவிட்டார். அடுத்து கோபி பழனிச்சாமி அம்மாவை பார்ப்பதற்காக அவங்க வீட்டுக்கு போகிறார்.

அங்கு பழனிச்சாமியின் அம்மாவிடம் கோபி பாக்யா பின்னாடி போக கூடாது என உங்க பையன கண்டுச்சிங்களா என்று கேட்பதற்கு நான் ஏன் கண்டிக்கணும் அவங்க ரெண்டு பேருமே வளர்ந்தவங்க, நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கே ஒரு யோசனை வந்தது பேசாம பழனிச்சாமிக்கு பாக்யாவையே கட்டிவச்சிடலாமா என்று சொல்கிறார் இதைக் கேட்டு கோபி என்ன இந்த அம்மா எப்படி இருக்காங்க என்று நினைத்து கிளம்புகிறார்.

அப்பொழுது பழனிச்சாமியும் அங்கு வருகிறார் கோபியிடம் என்ன அண்ணா இங்க வந்து இருக்கீங்க வாங்க சாப்பிடலாம் என்று தடபுடலாக விருந்து வைக்கிறார் ஆனால் கோபி நான் சாப்பிடுறதுக்காக ஒன்னும் இங்க வரலை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்து பாக்யா காலேஜுக்கு செல்கிறார். அங்கு இனியாவின் பிரண்ட்ஸுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு காலேஜுக்கு நேரா மாகி விட்டது என்று இனியாவின் பிரண்ட்ஸும் வீட்டுக்கு கிளம்புகின்றனர் பாக்யாவும் கிளாசுக்கு செல்கிறார்.

அடுத்து இனியாவை கோபி வந்து பிக்கப் செய்து சொல்கிறார். அப்போது காரில் கோபியுடன் இனியா பேசிக் கொண்டிருக்கும் பொழுது அம்மா அவங்க ட்ரீம்ஸ் அச்சீவ் பண்ணிடுவாங்களாட்டுக்கு என்று சொல்வதற்கு எல்லோருக்கும் கனவு இருக்கும் அதனால எல்லாமே அவங்க கனவ அச்சீவ் பண்றாங்களா பாக்கியா ஏற்கனவே அதை பண்றேன் இதை பண்றேன் என்று நிறைய தலையில் தூக்கி வைத்து இருக்கிறார். மீதி இருக்குற கொஞ்ச நேரத்துல காலேஜ் தேவையா என்று கோபி இனியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.

Leave a Comment