நாதஸ்வரம் சீரியல் மலரா இது.! இப்ப மாடனுடையல் இவ்வளவு அழகா இருக்காங்களே..

பொதுவாக சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளை விட அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுவார்கள். அப்படி அந்த நடிகைகள் சில சீரியல்களில் மட்டுமே நடித்துவிட்டு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் கூட ரசிகர்கள் அவர்களை சோசியல் மீடியாவில் பின்பற்றி வருகின்றனர். அப்படி தனக்கென ஒரு பெருத்த ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை ஸ்ரீதிகா.

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான முகூர்த்தம் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் என ஏராளமான ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். இவ்வாறு முக்கியமாக நாதஸ்வரம் தொடர் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தினை பெற்று தந்தது.

இந்த சீரியலில் மலராக நடித்திருந்த நிலையில் பலரும் தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்த்து வந்தனர். இந்நிலையில் சமீப காலங்களாக இவர் சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் யாராலும் மறக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஸ்ரீதிகா.

நடிகை ஸ்ரீதிகா சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பு பேசப்படவில்லை.

எனவே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஸ்ரீதிகா கடந்த 2019ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தற்பொழுது சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மாடன் உடையில் செம ஸ்டைலாக அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் நாதஸ்வரம் சீரியல் மலரா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

sri dhika
srithika

Leave a Comment