விஜய் டிவியில் படும் ஹிட்டாக நான்கு வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் பாரதி கண்ணம்மா தொடர் சென்ற வாரம் நிறைவடைந்தது. இந்த சீரியலை ஆரம்பத்தில் இயக்குனர் கதையை சுவாரசியமாக கொண்டு சென்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னிலையில் வகித்தது.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே கதையை பல எபிசோடுகளாக ஓட்டி வந்ததால் சீரியலின் சுவாரஸ்யம் குறைந்துள்ளது. அதனால் ரசிகர்கள் பலரும் எப்படா.. இந்த சீரியலை முடிப்பீர்கள் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஒரு வழியாக பாரதிகண்ணம்மா சீரியல் இறுதியில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் நடந்த கசப்பான சம்பவங்கள்..
அனைத்தையும் மறந்து விட்டு இரண்டாவது முறையாக இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளது போல் சீரியல் நிறைவு பெற்றது இதன் பைனல் எபிசோட்டில் பிக் பாஸ் சினேகன், சிவின் மற்றும் ஆர் ஜே பாலாஜி போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அடுத்து உடனடியாக இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகியது அதில் ஹீரோவாக ரோஜா சீரியல் பிரபலம் திப்பு மற்றும் வினுஷா இருவரையும் காண்பித்ததால் இவர்கள்தான் பாரதி கண்ணம்மாவாக நடிக்க உள்ளனர் என ரசிகர்கள் நினைத்தனர் ஆனால் எபிசோடை பார்த்த போது தான் தெரியவந்துள்ளது.
வினுஷா சித்ரா என்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் கண்ணம்மாவாக பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா என கூறப்படுகிறது. இவர் பூவே பூச்சூடவா, அபி டைலர் போன்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் அதுமட்டுமில்லாமல் தனது காதல் கணவர் மதனுடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
