தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த செம்பருத்தி சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

0
sembaruthi
sembaruthi

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகள் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருகிறது அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக புதுமுக நடிகர் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் ஒரு சில சீரியல்கள் டாப்பில் இருந்து வருகிறது.

அந்த வகையில் சன், விஜய் தொலைக்காட்சிகளுக்கு அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சிதான் ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த சீரியல் தான் செம்பருத்தி.

இந்த சீரியல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து டாப் சீரியலாக விளங்கி வந்தது மேலும் டிஆர்பியில் முன்னணி வகித்து வந்த நிலையில் இந்த சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை ஷபானா. இவர் கதாநாயகியாக நடித்த இந்த சீரியலின் கதாநாயகனாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார் இவர்களுடைய கெமிஸ்ட்ரி அல்டிமேட்டாக இருந்தது.

இவ்வாறு இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பொழுது திடீரென திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலின் கதாநாயகனாரும் விலகினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிது மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது மேலும் இந்த சீரியலில் அவருக்கு பதிலாக மற்றொரு நடிகர் அறிமுகமானார்.

இருந்தாலும் எப்பொழுது கார்த்திக் இந்த சீரியலில் மீண்டும் நடிப்பாயான ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்த நிலையில் புதிதாக அறிமுகமான நடிகரை ஏற்றுக் கொள்ளாமலேயே விட்டுவிட்டனர். இதன் காரணமாக கார்த்திக் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கு பிறகு பெரிதாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

bharathi naidu
bharathi naidu

எனவே இந்த சீரியலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது அந்த வகையில் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை பாரதி நாயுடு. இந்த சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த இவர் தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 9வது மாதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இவர்களுடைய மூன்றாவது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அம்மா, அப்பாவாக போவதை அறிவித்துள்ளனர்.