vijay

நடிகை பூஜா ஹெக்டே உடன் புட்ட பொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடிய தளபதி விஜய்.! வைரல் வீடியோ..

நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை நேற்று மிகவும் கோலாகலமாக கொண்டாடி இருந்த நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே உடன் சேர்ந்து புட்ட பொம்ம பாடலுக்கு நடனமாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள்.

மேலும் ஏராளமான தகவல்களையும் பகிர்ந்துக் கொண்ட நிலையில் இவருடைய பிறந்த நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட பணிகளை செய்தார்கள். இதனால் ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் பயனடைந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஏழைகளுக்கு அன்னதானம், இலவச பேருந்து இயக்கியது, நேற்று பிறந்த பச்சலம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தது, ரத்த தானம் முகாம் நடத்தியது என தமிழகமே கலை கட்டியது இதன் காரணமாக மறுபுறம் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு ஒரு புறம் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்து மழையை பொழிய மறுபுறம் ரசிகர்களும் விஜய்யை வாழ்த்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வந்தார்கள். எனவே நேற்றைய தினம் முழுவதும் விஜயை பற்றிய பதிவுகள் தான் சமூக வலைதளங்களில் கொட்டி கிடந்தது.

இவ்வாறு மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் லியோ பட குழு நேற்றைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டு இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே விஜய்யின் பிறந்தநாளுக்கு சற்று தாமதமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது விஜய் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்த பூஜா ஹெக்டே இதுவரை யாரும் பார்த்திடாத நடிகர் விஜய் உடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.