ஒரே சீனில் இத்தனை ரியாக்ஷனா அரபிக் குத்து பிடிஎஸ் வைரல் வீடியோ.!

தமிழ் சினிமாவில் ஒரு மிக பெரிய உச்சத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய். இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும் நடிகர் விஜய் வாரிசு திரைப்படம் முடிந்ததும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் எதிர் பார்த்தைதை பூர்த்தி செய்தது. அதனை தொடர்ந்து தளபது 67 திரைப்படத்தில் இணைய உள்ளனர்.

மேலும் இயக்குனர் லோகேஷ் அவர்கள் தளபதி67 திரைப்படம் குறித்து அவ்வபோது அப்டேட்டுகளை வெளியிடுகிறார். அந்த வகையில் தளபதி67 திரைப்படத்தில் 6 வில்லன்கள் உள்ளதாகவும் அதில் விஜய் தான் மெய்ன் வில்லனாகவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தை டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்கி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம் ஆனால் இந்த படத்தில் அமைந்துள்ள எல்லா பாடல்களுமே ஹிட் தான் என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கியிருந்தார்  இசையமைப்பாளர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் youtube இல் பல மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சென்றது. அதனை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் அரபி குத்து பாடலின் BTS வீடியோவை பகிர்ந்து உள்ளார். இதனால் விஜயின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment