கோடிகளில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.! முதல் இடத்தை தட்டி தூக்கிய நம்பர் நடிகை..

Tamil Top 5 Actress Salary: சினிமாவை பொருத்தவரை நடிகர்களுக்கு மட்டும்தான் 100 கோடி முதல் 200 கோடி வரை சம்பளம் தரப்பட்டு வருகிறது. நடிகைகள் 10 கோடி முதல் 15 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்த சூழலில் தன்னுடைய மார்க்கெட் உயர்ந்ததால் நடிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் அளவிற்கு அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

5. சமந்தா: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் இவருடைய மார்க்கெட் உயர்ந்தது. எனவே சம்பளத்தை உயர்த்திய சமந்தா ஒரு படத்தில் நடிப்பதற்காக 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய 5 பிரபலங்கள்.!

4. பூஜா ஹெக்டே: முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்து மாஸ்காட்டி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஒரு படத்திற்கு 6 கோடி ரூபாய் முதல் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

3. ஸ்ரீநிதி ஷெட்டி: யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்ரீநிதி ஷெட்டி தற்பொழுது இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தற்பொழுது இவர் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

2. திரிஷா: இழந்த மார்க்கெட்டை 90s படத்தின் மூலம் பெற்ற திரிஷா பொன்னியின் செல்வன்,  லியோ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். தற்பொழுது புகழின் உச்சத்தில் இருக்கும் திரிஷா ஒரு பட்டத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

பங்காளி கொஞ்சம் நஞ்ச ஆட்டமா ஆடுன.! சிங்கம் சூர்யா போல் ஓங்கி ஒரே அடியாக அடித்த முத்து.! எழுந்திருக்க முடியாமல் திணறும் மனோஜ்..

1. நயன்தாரா: நடிகை நயன்தாராவின் படத்திற்கு சொல்லும் அளவிற்கு சமீப காலங்களாக நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் கூட கலவை விமர்சனத்தை பெற்று வசூலில் படும் தோல்வியினை சந்தித்தது இருந்தாலும் பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கான்னு ஜோடியாக நடித்த இவர் 13 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.