பங்காளி கொஞ்சம் நஞ்ச ஆட்டமா ஆடுன.! சிங்கம் சூர்யா போல் ஓங்கி ஒரே அடியாக அடித்த முத்து.! எழுந்திருக்க முடியாமல் திணறும் மனோஜ்..

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து  தனது மனைவி பூ கடை ஆரம்பித்ததற்காக அனைவருக்கும் நோட்டீஸ் கொடுத்து பிரபலப்படுத்துகிறார் . அப்போது பார்க்கின் வெளியே வாட்ச்மேனுக்கும் நோட்டீஸ் கொடுக்கிறார். எதிர்பாரா விதமாக பார்க்கில்  அமர்ந்திருக்கும் தனது அண்ணன் மனோஜை பார்த்து விடுகிறார்.

அப்போது வாட்ச்மேன் அவங்க கடக்குறாங்க வெட்டி பசங்க ரெண்டு மாசமா இங்க வந்து வெட்டியா சாப்பிட்டு தூங்கிட்டு இருக்காங்க என சொல்லுகிறார். அப்போது பார்க்கில் அமர்ந்திருக்கும் மனோஜ் மற்றும் அவரது நண்பரும் சுண்டல் வாங்கி சாப்பிட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வெங்கட் பிரபு பிடியில் சிக்கிய விஜய்.! எதிர்கால தலைவர் ஆசை இருக்கிற நீங்க இப்படி பண்ணலாமா தளபதி..?

அங்கு நடக்கும் அனைத்தையும் முத்து வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் . உடனே வாட்ச்மேன் ஏம்பா இவங்கள வீடியோ எடுக்கிற என கேட்கிறார். அதற்கு சும்மா தான் அண்ணன் இது ஒரு குறும்படம் என  சொல்லிவிடுகிறார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து மனோஜ் நண்பருடன் பார்க்கில் விளையாடுகின்றனர். சரியாக ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிட அமர்கின்றனர் சாப்பிட்டுவிட்டு பின்னர் தூங்குகின்றனர். பின்னர் 4 மணி அளவில் எழுந்து ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆபீஸ் முடிகிற நேரம் ஆனதும் பார்க்கை விட்டு கிளம்புகின்றனர்.

விஜயை புரட்டி எடுக்கும் வில்லனாக அஜித் நடிக்க வேண்டும்.. பிரபல நடிகையின் விபரீத ஆசை..

இந்த நிகழ்வு அனைத்தையும் முத்து வீடியோவாக எடுத்துக் கொள்கிறார். அதோடு மட்டுமில்லாமல் வாட்ச் மேனிடம் இவர்களைப் பற்றி விசாரிக்கிறார் அவர் இவர்கள் இருவரும் இரண்டு மாதமாக தினமும் காலை 9 மணிக்கு எல்லாம் வந்து விடுவார்கள் சாயங்காலம் ஆனதும் சென்று விடுவார்கள் என கூறுகிறார்.

அத்தோடு மட்டுமில்லாமல் மனோஜ் வேலை பார்ப்பதாக சொன்ன அந்த கம்பெனிக்கு போய் மனோஜ் இங்கு தான் வேலை பார்க்கிறார் என விசாரித்து அதையும் ரெக்கார்ட் செய்து விடுகிறார். பின்னர் வீட்டுக்கு சென்று இந்த வீடியோக்களை போட்டு காட்டுகிறார். அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர். அந்த நேரத்தில் மனோஜ் வீட்டுக்குள் வந்து வாசல்ல பூ மூட்டைய வச்சது யாரு என்ன பாக்க கொலிக்ஸ்   வருவாங்க இத பாத்தா அசிங்கமா நினைக்க மாட்டாங்களா என்ன கத்துகிறார் .

புள்ள குட்டியுடன் இருக்கும் ஈரம் பட நடிகை சிந்து மேனன்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

அதுமட்டுமில்லாமல் ரோகினியிடம் இன்னைக்கு எங்க ஆபீஸ்க்கு யார் வந்தா தெரியுமா உனக்கு புடிச்ச விஜய் தான் வந்தாரு என சீன் போடுகிறார். அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.