புள்ள குட்டியுடன் இருக்கும் ஈரம் பட நடிகை சிந்து மேனன்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

eeram actress sindhu menon : நடிகை சிந்து மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் தமிழை தாண்டி தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகளில் தான் அதிகமாக நடித்துள்ளார் தமிழில் முதன் முதலாக சமுத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கடல் பூக்கள், யூத் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த திரைப்படம் ஈரம், ஈரம் திரைப்படத்தின் நடித்த மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல அடைந்தார் இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு அறிவழகன் வெங்கடாசலம் இயக்குனரால் இயக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தை சங்கர் அவர்கள் தயாரித்திருந்தார்.

படத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் படத்தின் கதை மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் தன்னுடைய மனைவியை கொன்று விடுகிறார் அந்த மனைவி ஆவியாக மாறி கணவன் தன்னை கொலை செய்ய தூண்டுதலாக இருந்தவர்களை தண்ணீர் உருவத்தில் காட்டி கொலை செய்வது தான் ஈரம் திரைப்படத்தின் கதை.

இவர் சில காலகட்டங்களுக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் இந்த நிலையில் சிந்து மேனனுக்கு  தற்பொழுது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் சிந்து மேனனா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

eeram actress sindhu menon
eeram actress sindhu menon
eeram actress sindhu menon
eeram actress sindhu menon