கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய 5 பிரபலங்கள்.!

Captain Miller Movie: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர் கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க வருகின்ற 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சந்தீப் கிஷன், எட்வர்ட் சோனன்ப்ளிக் மற்றும் ஜான் கோக்கன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக ஐந்து பிரபலங்கள் அதிக சம்பளம் வாங்கியுள்ளனர். அந்த பிரபலங்கள் குறித்தும் அவர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய தகவலும் கிடைத்துள்ளது.

வெங்கட் பிரபு பிடியில் சிக்கிய விஜய்.! எதிர்கால தலைவர் ஆசை இருக்கிற நீங்க இப்படி பண்ணலாமா தளபதி..?

ஜான் கோக்கன்: நடிகர் ஜான் கோக்கன் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தனுஷுக்கு வில்லனாக கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக 60 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

பிரியங்கா அருள் மோகன்: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக ரூ.80 லட்சம் வாங்கியுள்ளாராம்.

சுந்தீப் கிஷன்: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஹீரோவாக நடித்து வரும் சுந்தீப் கிஷன் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக ரூ.3 கோடி தரப்பட்டுள்ளதாம்.

விஜயை புரட்டி எடுக்கும் வில்லனாக அஜித் நடிக்க வேண்டும்.. பிரபல நடிகையின் விபரீத ஆசை..

சிவ ராஜ்குமார்: தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக பிரபலமாகி இருக்கும் நடிகர் சிவராஜ்குமார் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 5 கோடி தரப்பட்டுள்ளதாம்.

தனுஷ்: கோலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக ரூபாய் 30 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோவான தனுஷுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.