கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டேவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Actress Pooja Hegde Net worth: பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தருவது வழக்கம் அப்படி அந்த நடிகைகள் குறைவான சம்பளங்களை பெற்றாலும் விளம்பரங்கள், போட்டோ ஷூட் என பலவற்றின் மூலம் சம்பாதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் முன்னணி நடிகை பூஜா ஹெக்டேக்கின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே 1990ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் நேற்று மாலத்தீவில் தனது 33 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். எனவே ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

பூஜா ஹெக்டே இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இவ்வாறு தமிழ் சினிமாவின் மூலம் நடிக்க தொடர்ந்தாலும் இவருக்கு பெரிதாக தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்தார் அப்படி அல்லு அர்ஜுனுடன் துவடு ஜெகநாதம் மற்றும் அலா வைகுண்டபுரமுலோ, ரித்திக் ரோஷன் உடன் மொகஞ்சதாரோ, மகேஷ் பாபு உடன் மகரிஷி என பல ஹிந்தி படங்களில் நடித்தார். இவ்வாறு இதன் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இப்படத்தில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து 15கும் மேற்பட்ட திரைப்படங்களில் இருக்கும் பூஜா ஹெக்டே ஒரு படத்தில் நடிப்பதற்காக 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறாராம் அப்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.