தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகைகள்.! நயன்தாராவை பொட்டி பாம்பாக அடக்கிய திரிஷா..

Top 10 Highest Paid Actresses In South : தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதிக சம்பளம் வாங்கி வந்தார், கடைசியாக வெளியாகி ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் 210 கோடி என கூறப்படுகிறது. சம்பளமாக 110 கோடியும் பின்னர் படம் லாப விகிதம் மூலம் 100 கோடியும் பேசப்பட்டிருந்தது இதனால் ரஜினிக்கு 210 கோடி சம்பளம் கிடைத்துள்ளது.

ரஜினியை தொடர்ந்து விஜய், கமல், அஜித், பிரபாஸ் ஆகியோர்கள் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களாக இருக்கிறார்கள் அதே போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகியோர்கள் அதிக சம்பளம் வாங்கும் லிஸ்டில் இருக்கிறார்கள். நடிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நடிகைகள் அதிக சம்பளம் யார் வாங்குகிறார்கள் என்று இங்கே காணலாம்.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்டில் முதலிடத்தில் நடிகை நயன்தாரா இருந்து வந்தார் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி முதல் 11 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் தற்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி  கொடுத்த திரிஷா நயன்தாராவின் சம்பளத்தை ஓவர் டேக் செய்துள்ளார்.

இந்த நிலையில் கமலஹாசனின் அடுத்த திரைப்படத்தில் நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்காக நடிகை திரிஷா 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கு போகிறார் என தகவல் கிடைத்துள்ளது, மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் திரைப்படத்தில் திரிஷா 12 கோடி சம்பளம் வாங்கிவிட்டால் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்டில் முதலிடத்தை நடிகர் திரிஷா பிடித்து விடுவார்.

இந்த நிலையில் இரண்டாவது இடத்தை நடிகை நயன்தாரா தக்க வைத்துக் கொள்வார் ஆனால் த்ரிஷா மற்றும் நயன்தாரா வாங்கும் சம்பளத்தில் பாதி அளவு கூட இதர இடத்தில் இருக்கும் நடிகைகள் வாங்கவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது, மூன்றாவது இடத்தில் அனுஷ்கா ஷெட்டி ஆறு கோடி ரூபாயும், அதேபோல் நடிகை சமந்தா 3 முதல் 8 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வருகிறார்.

Actress trisha
Actress trisha

நடிகை பூஜா ஹெக்டே 2.5 கோடி முதல் 7 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார், அதேபோல் ராஷ்மிகா மந்தனா 2 கோடி முதல் 5 கோடி வரையும், தமன்னா ஒன்றை கோடி முதல் 5 கோடி வரையும், காஜல் அகர்வால் ஒன்றரை கோடி முதல் 4 கோடி வரையும், சம்பளமாக வாங்கி வருகிறார்கள் அதே போல்  ரகுல் பிரீத் சிங் ஒன்றரை கோடி முதல் மூன்று கோடி வரை கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி முதல் மூன்று கோடி வரை சம்பளமாக வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

nayanthara
nayanthara