ajith like

பள்ளி பையனாக அஜித் இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!!

தோல்விகள் பல கடந்து தற்போது தவிர்க்க முடியாத நம்பர்-1 ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தல அஜித். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாகவும் வெற்றி நாயகனாக வலம் வந்து இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ளார்.

மேலும் அதனைத் தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் அப்டேட் பற்றி ஏதாவது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் வரும் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. எனவே ரசிகர்கள் வெகு ஆவலாக காத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தல அஜித் சிறுவயதில் செருப்பு விளம்பரத்தில் நடித்து இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

அந்த விளம்பரத்தில் ஸ்கூல் பையன் போல் மிக அழகாக இருக்கும் அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதோ அந்த வீடியோ.