யாருக்கும் தெரியாமல் மாஸ்க் போட்டுக்கிட்டு auto வில் பயணித்த அஜித்.! வைரல் வீடியோ இதோ

தல அஜித் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தனியிடம் பிடித்து வருகிறார்.

அத்தகைய ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க சினிமாவையும் தாண்டி பல திறமைகளை வெளிக்காட்ட தற்பொழுது முயற்சித்து வருகிறார்.

இதுவரை கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த அஜீத் திடீரென துப்பாக்கி சூடுதல், ட்ரோன் இயக்குதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டி அதிலேயும் வெற்றி கண்டார்.

இதனாலேயே ரசிகர்கள் பலரும் அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்

இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது ஹச் . வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் இதன் படப்பிடிப்புகள் தற்போது முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நடத்தி வருகிறது படக்குழு.

அப்படி இருக்கின்ற நிலையில் தல அஜித் முகத்தில் முகமூடியை அணிந்து ஆட்டோ ஒன்றில் பயணித்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Comment