அஜித்தின் “வலிமை” படத்தை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய முன்னணி நிறுவனம்.? உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் பலரும் இருந்தாலும் அவர்களை எல்லாம் தாண்டி அஜித் என்ற ஒற்றை சொல்லுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் அந்த அளவிற்கு தனக்கான பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு வருடங்களுக்கு மேலலாகி அடுத்த படம் வெளிவராமல் இருக்கிறது. காரணம் கொரோனா என்ற ஒற்றைச் சொல் உலகத்தையே ஆட்டிப் படைத்த அதனால் அனைத்தும் அடங்கியது அதில் ஒன்றுதான் சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அஜித்தின் வலிமை படமும் பல இடையூறுகளை சந்தித்து தற்போது ஒருவழியாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் தமிழக உரிமையை “கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம்” ரெக்கார்ட் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

கோபுரம் பிலிம்ஸ் வாங்கிய உள்ளதால் வலிமை படம் தமிழகமெங்கும் மிகப்பெரிய அளவில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது இதனால் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

ajith
ajith