அஜித்தின் ஆரம்பம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.!பல வருடம் கழித்து வெளியான ரகசியம்.!

0

தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை எத்தனையோ நடிகர்கள் கவர்ந்தாலும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகர் என்றால் அது தல அஜித் தான் கூறவேண்டும் ஆம் தல அஜித் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கும்.

மேலும் தல அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருவது என்னவென்றால் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் தான் இந்த வலிமை திரைப்படத்தை எச் வினோத் இயக்கி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தல அஜித் பிறந்த நாளன மே 1 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து விஷ்ணுவரதன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் ஆரம்பம் இந்த படத்தில் ராணா டகுபதி,நயன்தாரா,டாப்சி,ஆர்யா,அக்ஷரா கவுடா போன்ற சினிமா பட்டாளமே நடித்திருந்தார்கள்.

இந்த  திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.

ajith
ajith

இந்நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஷ்ணுவர்தனின் தம்பி மற்றும் நடிகருமான கிருஷ்ணா தான் நடிக்க இருந்தாராம் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து ராணா டகுபதி நடித்திருப்பார் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.