vanitha vijayakumar

என்னுடைய ஜோடி இவர் தான் ரகசியத்தை லீக் செய்த வனிதா விஜயகுமார்.!

பல நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி சில காலகட்டத்திலேயே தங்களது திறமையின் மூலம் எளிதில் சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருப்பார்கள். பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சினிமாவை விட்டு விலகி செட்டிலான பணக்கார தொழிலதிபர்களை பார்த்து திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் ஒருவர் தான் வனிதா இவர் விஜயகுமாரின் மகளாக வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தவகையில் அப்பொழுதே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.  பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் இரண்டு, மூன்று திருமணம் செய்துகொண்டு சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது தனது இரு மகள்களுடன் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இவர் பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3-யின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரீ கொடுத்தார்

இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி மற்றும் காமெடி ஷோ போன்றவற்றில் பங்கு பெற்று வந்தார். இந்நிலையில்  அனிதாவிற்கு திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

169229799_880902776023589_6113705228171581524_n
169229799_880902776023589_6113705228171581524_n

அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் தியாகராஜன்  நீண்ட காலங்களுக்குப் பிறகு பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்பொழுது அந்த திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

169242894_2874012686168823_2831618383918173661_n
169242894_2874012686168823_2831618383918173661_n

இந்நிலையில் தற்போது வனிதா நானும் அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளேன் என்று கூறி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த வீடியோ.

vanitha1

நீ என்ன விளக்கு பிடிச்சியா.! இல்ல மாமா வேலை பார்த்தியா.! பொங்கி எழுந்து பச்சை பச்சையாக பேசிய வனிதா.! வீடியோ உள்ளே

actress vanitha vijayakumar video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு தினங்களாக நீதிமன்ற டாஸ்க்  மிக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அவ்வப்போது ஹவுஸ் மேட்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  பாலாஜி முருகதாஸ் அவர்கள் சனம் ஷெட்டியை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் வாய்ப்பை பெற்றார் எனக்  கூறியுள்ளார்.

இதனை அறிந்த வனிதா விஜயகுமார் அவர்கள் சனம் ஷெட்டியை இப்படி கூறியது மிகவும் தவறு என பாலாஜி முருகதாஸின் இந்த செயலை எண்ணி அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும் அது மட்டுமல்லாமல் நடிகை நயன்தாராவை இப்படி ஒரு கேள்வி கேட்பாரா எனவும் அவர் எத்தனை பேரை அட்ஜஸ்ட் செய்து இருக்கார் என சொல்லுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

பெண்களை இதுபோல் தரக்குறைவாக பேசும் இவர்களை விடக்கூடாது இவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

vanittha

நான் தோத்து போய்ட்டேன்!! எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்கும் வனிதா விஜயகுமார்!! வைரலாகும் வீடியோ… கடவுள் இருக்கான் குமாரு..

vanitha vijayakumar asking apology to elizabeth video viral: சில மாதங்களுக்கு முன்புதான் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பீட்டர் பாலின் மனைவி மற்றும் அவரது மகன் என இருவரும் இவர்களது திருமணத்தை பெரிதாக எதிர்த்தனர். பீட்டர் பால் விவாகரத்து பெறாமலேயே வனிதா விஜயகுமாரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பீட்டர் பாலுவின் முதல் மனைவியான எலிசபெத் அவர்கள் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் துரோகம் செய்துவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இவற்றை எதையும் கண்டுக்கொள்ளாமல், இப்படி பல சர்ச்சைகளை தாண்டி வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதை அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக கோவாவிற்கு சென்று அங்கு புகைப்படங்கள் எடுத்து இணைய தளங்களில் பதிவிட்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது பீட்டர்பாலின உடல் நிலை மிக மோசமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மனைவி ஸ்தானத்தில் இருந்து வனிதா விஜயகுமார் கையெழுத்து  விட முடியவில்லை.

எனவே அதற்காக எலிசபெத்திற்க்கும் அவரது மகனுக்கும் செய்தியை தெரிவித்தார். ஆனால் அவர்கள் இருவருமே எந்தவித ரெஸ்பான்சும அளிக்கவில்லை. மேலும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா விஜயகுமார் அவர்கள் உங்களை நான் எந்த விதத்திலாவது கஷ்டப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் உங்களுக்கு பீட்டர் பாலுடன் வாழ விருப்பம் இருந்தால் நீங்கள் வாழலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை நீங்கள் மீடியாவிற்கு சென்றதால் தான் இப்படி ஒரு பிரச்சினை ஆகிவிட்டது நீங்கள் தனியாக என்னிடம் பேசி இருந்தால் பிரச்சினை ஆகாமல் இந்த விஷயம் முடிந்து இருக்கும் என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.