பல நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி சில காலகட்டத்திலேயே தங்களது திறமையின் மூலம் எளிதில் சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருப்பார்கள். பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சினிமாவை விட்டு விலகி செட்டிலான பணக்கார தொழிலதிபர்களை பார்த்து திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் ஒருவர் தான் வனிதா இவர் விஜயகுமாரின் மகளாக வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தவகையில் அப்பொழுதே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டார்.
அந்த வகையில் இரண்டு, மூன்று திருமணம் செய்துகொண்டு சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது தனது இரு மகள்களுடன் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இவர் பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3-யின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரீ கொடுத்தார்
இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி மற்றும் காமெடி ஷோ போன்றவற்றில் பங்கு பெற்று வந்தார். இந்நிலையில் அனிதாவிற்கு திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் தியாகராஜன் நீண்ட காலங்களுக்குப் பிறகு பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்பொழுது அந்த திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வனிதா நானும் அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளேன் என்று கூறி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
Joint the sets of #Andhagan today..privileged to be pairing with @thondankani https://t.co/nDnV9GeO1j
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) April 7, 2021