ஒரு வழியாக வனிதாவிற்கு அடுத்த ஜோடியை தேடி கண்டுபிடிச்சாச்சா.! வைரலாகும் தகவல்

சினிமாவில் சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானார் அறிமுகமான சில படங்களிலேயே விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என்னதான் இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக சினிமாவை விட்டு மொத்தமாக விலகிவிட்டார் நீண்ட வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்து இருந்தாலும் பெரும்பாலும் நெகட்டியு பெயரை பெற்றார்.

இந்நிகழ்வுக்குப் பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். அதோடு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் என்ற பெயரில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சீசன்களில் பங்கு பெற்றவர்களை வைத்து டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பத்தில் ஆஜித்,கேப்ரில்லா உள்ளிட்ட இன்னும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதோடு ஊரடங்கு போடப்பட்டதால் இந்நிகழ்ச்சி படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

VANITHA SURESH
VANITHA SURESH

அந்தவகையில் வனிதா விஜயகுமார் ஜோடிகள் யாரும் இல்லாமல் இதுவரையிலும் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியில் தனியாகத்தான் நடனமாடி வந்தார் இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் வனிதாவிற்கு ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தி நடனமாடி இருக்கிறார். அந்த புகைப்படம் கூட தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எப்படியோ வனிதாவிற்கு ஜோடி கிடைத்துவிட்டது என்று கூறிவருகிறார்கள்.

Leave a Comment