பல வாரிசு நடிகர், நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள். அந்தவகையில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் தளபதி விஜய், ராஜ்கிரண் உட்பட சில நடிகர்களுடன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருபவர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார்.
பிறகு தனது திருமணத்தில் கவனம் செலுத்தி வந்தார்.அந்த வகையில் 3 திருமணங்கள் செய்து தற்போது சர்ச்சை நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நெகட்டிவ் பெயரே ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.
இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்துன நிலையில் தனது இரண்டு மகள்கள் விருப்பத்துடன் பீட்டர் பால் என்பவரையும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.
பிறகு வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பிறகு குக் வித் கோமாளி முதல் சீசனில் குக்காகவும் கலந்துகொண்ட ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் இவர்2k காதல் என்ற அழகான திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக பல வருடங்களுக்குப் பிறகு நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

இவ்வாறு ஹீரோயினாக கமிட்டாகி வரும் இவர் தனது குண்டான உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வனிதாவா இது நம்பவே முடியல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
