பிரேக்கப் விரக்தியில் ஷகிலா உடன் இணைந்து வனிதா செய்த செயலை பார்த்தீர்களா.! மோசமாக விமர்சிக்கும் ரசிகர்கள்

நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், இந்த நிகழ்ச்சியில் வனிதாவை பார்த்தாலே சக போட்டியாளர்கள் நடுங்குவார்கள் அந்தளவு வனிதாவின் அட்டகாசம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் வனிதா திருமணம் செய்து கொண்டார்கள், ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள்.

அதனால் வனிதா சோகக் கடலில் மூழ்கி விட்டார் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் வனிதா ஷகிலா உடன் இணைந்து ஷாக் கொடுக்கும் வகையில் இன்டர்வியூ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பீட்டர் பால் அதிகமாக குடிப்பதாலும் அதனால்தான் அவரை விட்டு விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வனிதா ஷகிலா உடன் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோவில் ஷகிலா வனிதாவிடம் ஏன் டல்லா இருக்க என கேட்டுள்ளார், அதற்கு வனிதா சிரித்துக்கண்டே ‘பிரேக்கப் மேக்கப்’ என கூறுகிறார் அதற்கு ஷகிலா உனக்கு ஒன்று அல்லது இரண்டு தான் ஆனால் எனக்கு 13, 14 இருக்கு அதனால நான் ட்ரை பண்ண வில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த வீடியோவின் இறுதியில் ஷகிலா நம்ம எல்லாம் பண்ணா வேற லெவல்ல பண்ணனும் என வனிதாவை பார்த்து கூறியுள்ளார் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் வனிதாவிற்கு பிரேக்கப் ஆனாலும் அதற்கான கவலையும் சோகமும் அவரிடம் இல்லை.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் பங்கு பெறும் அந்த வீடியோவை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment