தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்திக்கை வைத்து கடந்த 2019ஆம் ஆண்டு கைதி திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற நிலையில் போலா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
ஹிந்தி ரீமேக்கை அஜய் தேவ்கன் இயக்க அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அமலா பால், தபு, சஞ்சய் மிஷ்ரா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகி தபு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இதற்கு முன்பு காஞ்சனா, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக்காகி மிகப்பெரிய தோல்வியடைந்த நிலையில் அதேபோல் தற்பொழுது கைதி படம் போலா என உருவாகி தோல்வியை சந்திக்க இருக்கிறது.
சமீப காலங்களாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து படு தோல்வினை சந்தித்து வருகிறது என்றுதான் கூற வேண்டும் இப்படிப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜின் கைதி படம் தமிழில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு இந்த படத்தினை இப்படி கொடுமை செய்து வைத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.