2023 – ல் வெளியாக இருக்கும் பார்ட் 2 திரைப்படங்கள்.! ஒன்னுக்கு ஒன்னு சலிச்சதே இல்ல..

சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் உடனே பார்ட் 2 பார்ட் 3 படங்கள் ரிலீஸ் ஆகுவது வழக்கம். இது ஹாலிவுட் படங்களில் மட்டுமே அதிகமாக இருந்தது ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவிலும் இதை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டுமே தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்கள் 10 வெளியாகின்றன..

1. இந்தியன் 2 : 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து  2019 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவானது ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட ஷூட்டிங்கை நிறுத்தியது பல வருடம் கழித்து தற்போது மீண்டும் சூட்டிங் நடைபெற்று வருகிறது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

2. பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்திருந்தார் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆக இருந்தது. முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. அதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

3. விடுதலை 2 : இயக்குனர் வெற்றிமாறன் உண்மை மற்றும் நாவல் கதைகளை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் நாவலை தழுவி விடுதலை என்னும் படத்தை எடுத்திருக்கிறார் இந்த படம் நீளமாக இருப்பதன் காரணமாக இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் முதல் பாகம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதனைத் தொடர்ந்து பார்ட் 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

4. சார் பட்டா பரம்பரை  2 : இயக்குனர் பா. ரஞ்சித் ஆர்யாவை வைத்து எடுத்த திரைப்படம் சார் பட்டா பரம்பரை இந்த படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது அதனைத் தொடர்ந்து பார்ட் 2 திரைப்படம் உருவாகப் போவதாக அண்மையில் படகுழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

5. கைதி 2 : மாநகரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எடுத்த திரைப்படம் தான் கைதி இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி 2  உருவாகும் என அப்பொழுதே சொல்லப்பட்டது. அதன்படி இந்த வருடத்தில் கைதி 2 உருவாகும் என சொல்லப்படுகிறது. புஷ்பா 2, விக்ரம் 2, ஜிகர்தண்டா 2, சர்தார் 2, சந்திரமுகி 2 போன்றவை பார்ட் 2 திரைப்படங்களாக வெளியாக இருக்கிறது. இதில் உங்களுடைய பேவரட் படம் எது என சொல்லுங்கள்

Leave a Comment