கைதி 2 சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..! ஆக ஒரே கல்லில் ரெண்டு மாங்காவா..!

மாநகரம் திரைபடத்தின் மூலம் மாபெரும் இயக்குனராக தோற்றமளித்தவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்து வாங்கியது இதன் பிறகு இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அந்த வகையில் இவர் சமீபத்தில் இயக்கிய கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் தற்போது உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அது மட்டுமில்லாமல் கடந்த 2019ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்று லோகேஷ் கனகராஜ் பெரும் புகழைத் தேடித்தந்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில் இந்த கைதி திரைப்படம் ஆனது இந்தியா மட்டுமின்றி ஜப்பானிலும் வெளியாகும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. பொதுவாக கோலிவுட் சினிமாவில் உருவாகும் திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் மட்டுமே ஜப்பானில் வெளியாகும் ஆனால் தற்போது கார்த்திக் கைதி திரைப்படம் வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் இத்திரைப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் அந்த வகையில் முதல் பாகம் முடிவில் இரண்டாம் பாகம் தொடர்ச்சியை லோகேஷ் கனகராஜ் காட்டி இருப்பார் அதுமட்டுமில்லாமல் இந்த முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்திற்கு தேவையான பாதி காட்சிகளை லோகேஷ் கனகராஜ் முன்பே எடுத்து விட்டாராம். ஆகையால் மீதமுள்ள படப்பிடிப்பை எடுக்க வெறும் முப்பது நாட்கள் மட்டுமே போதும் என கூறப்பட்டுள்ளது.

kaithi
kaithi

இந்நிலையில் இந்த இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு ஒரு பேரின்பத்தை கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த கார்த்திக் பெருமாள் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருவதன் காரணமாக இத்தனை பட படப்பிடிப்பு முடிந்தவுடன் கைதி இரண்டாம் பாகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment