கார்த்தியின் ஜப்பான் படத்தினால் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா? சாட்டிலைட் உரிமையும் விற்கப்படாத சோகம்..

Japan Movie Box Office: கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜப்பான் திரைப்படம் படும் தோல்வியினை சந்தித்திருக்கும் நிலையில் இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி ஸ்பெஷல் ஆக நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தினை ராஜு முருகன் இயக்கினார். இவர் இதற்கு முன்பு ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஜோக்கர் படம் தேசிய விருதை வென்று சாதனை படைத்தது. எனவே இதனால் ராஜு முருகன், கார்த்தி கூட்டணி அமைந்ததால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஒரே நேரத்தில் இருவருக்கு காதல் வலையை வீசிய சூனியக்காரி.! தினேஷை பழி வாங்க தான் இந்த நார வேலையா..

அந்த வகையில் ட்ரெய்லர் ,டீசர் போன்றவையும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜப்பான் முதல் காட்சியிலேயே படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது. ஜப்பான் படத்திற்கு போட்டியாக இறங்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது.

தீபாவளி விடுமுறையான முதல் 4 நாட்களில் மட்டுமே ஓரளவிற்கு ஜப்பான் வசூல் செய்தது எனவே இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த கார்த்தியின் சர்தார் படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ஷேர் கிடைத்ததாம்.

பிக் பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.. மாயாவுக்கு ஆப்பு வைத்த பூர்ணிமா.! ஒருவேளை இதுவும் கண்டென்டா?

ஆனால் ஜப்பான் படத்துக்கு 20 கோடியாவது கிடைக்கும் என தியேட்டர்காரர்கள் நினைத்துள்ளனர். ஆனால் தற்பொழுது இவர்களுக்கு 5 கோடி கிடைப்பதே கஷ்டம் என கூறப்படுகிறது இதன் மூலம் 15 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது ஜப்பான் படம். மேலும் சாட்டிலைட் உரிமையும் இன்னும் இப்படத்திற்கு விற்கப்படவில்லையாம்.

ஏனென்றால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு இதனுடைய சாட்டிலைட் உரிமையை பல கோடிக்கு விற்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். ஆனால் இதனை வாங்க யாரும் முன் வராத காரணத்தினால் தற்பொழுது அதுவும் விற்கப்படவில்லை. எனவே இதனால் 15 கோடி என மொத்தம் 30 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக திரைவுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.