பிக் பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.. மாயாவுக்கு ஆப்பு வைத்த பூர்ணிமா.! ஒருவேளை இதுவும் கண்டென்டா?

Bigg Boss season 7 Tamil today promo 3: பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை முதல் சீசனில் இருந்து நடந்து முடிந்த 6வது சீசன் வரையிலும் காதல் ஜோடிகள் உருவானதை பார்த்தோம். அப்படி ஏராளமான காதல் பிக் பாஸ் வீட்டில் உருவாகி இருந்தாலும் வெளியில் சென்றவுடன் பிரிந்து விடுகின்றனர்.

ஆனால் தற்பொழுது வரையிலும் அமீர்-பாவனி மட்டுமே வெளியில் வந்த பிறகும் ஒன்றாக சுற்றி வருகிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுகிறது. இந்த சீசன்களை விட சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் 7வது சீசன் வித்தியாசமான காதல் ஜோடிகள் உடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

ரஜினி ரசிகனாக இருந்து.. தளபதி ரசிகராக மாறிய அட்லீ.! இதோ அவரே கூறிய சுவாரசிய தகவல்

ஆரவ்-ஓவியா காதலை கூட ரசிகர்கள் ஆதரித்தனர் ஆனால் இந்த சீசன் காதல் உண்மையாகவா? இல்ல கண்டென்டுக்காகவா? என்பதே தெரியாமல் இருந்து வருகிறது. அப்படி மணி-ரவீனா இருவரும் ஒன்றாக சுற்றி வரும் நிலையில் ரவீனாவை பாதுகாப்பதையே மணி வேலையாக வைத்திருக்கிறார்.

இவர்களை அடுத்து நிக்சன்-இஷூ காதல் வேற லெவல் ஒரே தட்டில் சாப்பிடுவது, கண்ணாடி முன்பு முத்தமிட்ட கொள்வது, அனைவர் முன்பும் ஐஷூவை நிக்சன் தூக்கி செல்வது என பல சில்மிஷன் வேலைகள் செய்து வந்ததார்கள். கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று ஐஷூ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கருங்காலியால் காலியான லோகேஷ்… சிக்கிச் சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்.! அப்போ தனுஷ்..?

இந்த சூழலில் தற்பொழுது மீண்டும் பிக் பாஸ் சீசன் 7 புதிய காதல் உருவாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூர்ணிமா, விஷ்ணு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது விஷ்ணு கூறியதாவது, இன்னும் ஒரு பொண்ண இழுத்தாங்க எனக்கு அது பயமே கிடையாது.

எங்க வீட்ல நான் எந்த பொண்ண சொன்னாலும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க நான் இப்ப வரையும் சிங்கிளா இருக்கேன் அவர் சொன்னாருல பொறுக்கினு நான் பொறுக்கி தானமா சுத்திகிட்டு இருக்க மாட்டேன் என்று எமோஷனல் ஆகிறார். அதற்கு பூர்ணிமா யாருதாங்க நீங்க என கேட்க அதற்கு விஷ்ணு தனது நெஞ்சில் கையை வைத்து காமிக்கிறார்.

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த இரண்டு முன்னணி ஹீரோக்கள்.. கடைசியில் கமீட்டான விக்ரம் – அட இப்படியெல்லாம் நடந்து இருக்கா.?

இதற்கு பூர்ணிமா இப்போ ஒன்னு பண்ணுனீங்கல அது எனக்கு புடிச்சிருக்கு சரி நான் ஒன்னு ஓப்பனா சொல்லிடட்டா எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கு எனக்கு என்ன தோணுதோ சொல்ற இல்லன்னா இல்லன்னு சொல்லிடலாம் ஓகேவா. உங்களுக்கு புடிக்கலனா என்கிட்ட சொல்லிடுங்க என்று கேட்க நான் எதுவுமே சொல்லலையே என்று விஷ்ணு கூறுகிறார். எனக்கு அந்த பீலிங் இருக்கு அப்படி பண்றீங்களா என்று கேட்கிறேன் என பூர்ணிமா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பூர்ணிமா விஷ்ணுவிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் ஏற்கனவே பூர்ணிமா மாயா இருவரும் லெஸ்பியன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் எப்பொழுதும் ஒன்றாக தூங்குவது, சுற்றுவது போன்றவற்றை வழக்கமாக வைத்திருக்கின்றனர். எனவே இதன் காரணமாக பூர்ணிமா மாயாவின் உறவில் விரிசல் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.