கருங்காலியால் காலியான லோகேஷ்… சிக்கிச் சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்.! அப்போ தனுஷ்..?

sivakarthikeyan dhanush lokesh kanagaraj karungali : சினிமா பிரபலங்கள் பலரும் கருங்காலி அணிந்துள்ளதால் அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். சமீப காலமாக கருங்காலி மாலை அடிக்கடி பல இடங்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம் அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்திலும் இந்த கருங்காலி மாலை பற்றி பலரும் பேசி வருகிறார்கள் அதனால் அதன் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது.

ஒரு பக்கம் சமூக வலைதளத்தில் கருங்காலியின் சக்தி இதுதான் என ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமா பிரபலங்களான சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் , ஆகியோர்கள் கருங்காலி மாலையை அணிந்து தான் அனைத்து காரியங்களையும் துவங்கினார்கள் அதேபோல் கோடம்பாக்கம் சாலிகிராமம் பக்கம் போனாலே சினிமா பிரபலங்கள் பலரும் கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து இருப்பதை பார்த்திருக்கலாம்.

குரு உச்சத்தில் இருந்தால் தான் இதுபோல நடக்கும்.. முரளி நடிக்கவிருந்த 3 படத்தை அலேக்காக தூக்கிய விஜய்.!

அந்த வகையில் வலைப்பேச்சு அந்தணன் சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் கருங்காலி மாலை அணிந்து இருப்பது குறித்து பேசி உள்ளார் வலைபெச்சு அந்தணன், சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டி ஒன்றைக் கொடுத்தார் அப்பொழுது செய்தியாளர் எதற்காக கருங்காலி மாலை அணிந்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு சிவகார்த்திகேயன் நல்லது நடக்கும் என பலரும் கூறினார்கள் அதனால் தான் போட்டு இருக்கிறேன் என கூறினார்.

ஆனால் கருங்காலி மாலை அணிந்தால் சிவகார்த்திகேயனுக்கு நல்லதே நடக்கவில்லை அந்த மாலை அணியாமல் இருந்தப்ப கூட நல்ல பெயரும் இருந்தது படமும் ஹிட் அடித்தது ஆனால் அந்த மாலை அணிந்த பிறகு இமான் விவகாரத்தில் அவர் பெயர் அடிபட்டு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய கெட்ட பெயர் உருவானது. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு தற்பொழுது வெளியாகும் அயலான் திரைப்படம் ஓடுமா ஓடாதா என்ற  குழப்பமும் இருந்து வருகிறது அதனால்தான் கருங்காலி மாலையை சிவகார்த்திகேயன் கழட்டிவிட்டார்.

நடைப்பெற்ற டாஸ்க்கில் ஸ்டாரை வென்ற போட்டியாளர்.! வயித்தெரிச்சலில் மாயா..

அதேபோல் லோகேஷ் கனகராஜ் அவர்களும் கருங்காலி மாலை அணிந்து வந்தார் லியோ திரைப்படம் வெளிய ஆவதற்கு முன்பு லோகேஷ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்தார் ஆனால் லியோ திரைப்படத்திற்கு பிறகு ஒரு இயக்குனர் அவ்வளவு தான் என்பது போல் ஆகிவிட்டது.  அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எடுப்பாரா என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.

மேலும் கருங்காலி மாலை கருங்காலித்தனமாக வேலை செய்து விட்டது இவர்கள் இருவருக்கும் என அந்தணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த லிஸ்டில் நடிகர் தனுஷ் அவர்களும் கருங்காலி மாலை அணிந்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும்.