நடைப்பெற்ற டாஸ்க்கில் ஸ்டாரை வென்ற போட்டியாளர்.! வயித்தெரிச்சலில் மாயா..

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் வித்தியாசமான டாஸ்க்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி கடந்த வாரம் கேப்டனாக இருந்த மாயா தனது ஏஜென்ட் டீமுடன் ஆட்டமாக ஆடி வந்த நிலையில் இந்த வாரம் அனைத்தும் அடங்கி உள்ளது.

ஏஜென்ட் டீமில் ஓவராக பேசிய ஐஷு மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து இந்த வாரம் அக்ஷயா, சரவண விக்ரம் இவர்களில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காதலிச்சிட்டு மூத்த நடிகர் உடன் ரூம்ல என்ன வேலை.? ஸ்லிம் நடிகையை நடுரோட்டிலேயே.. வாரிசு நடிகர் செய்த அட்டூழியம்…?

மிகவும் அமைதியாக பெரிதாக பேசாமல் இவர்கள் இருந்து வருவதனால் மிகவும் சுவாரசியம் குறைந்தவர்களாக இருக்கின்றனர். டாஸ்க்கள் நடைபெற்றாலும் அதில் பெரிதாக ஈடுபாடு காட்டாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிலிருந்து பெண் போட்டியாளர்கள் ஆண்களைப் போலவும் ஆண் போட்டியாளர்கள் பெண்களைப் போலவும் கேரக்டர்கள் மாறி நடித்து வருகின்றனர்.

முதல் ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள் சரியாக விளையாடினார்களா பெண் போட்டியாளர்கள் சரியாக விளையாடினார்களா என்பதற்கான விவாதம் நடைபெற்றது அதில் பெண் வேடம் அணிந்திருந்த ஆண் போட்டியாளர்கள் தான் நன்றாக விளையாடியதாக முடிவெடுத்துள்ளனர்.

என்ன காதலிச்சிட்டு மூத்த நடிகர் உடன் ரூம்ல என்ன வேலை.? ஸ்லிம் நடிகையை நடுரோட்டிலேயே.. வாரிசு நடிகர் செய்த அட்டூழியம்…?

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய 2வது ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்களுக்கு ஸ்டார் கிடைத்துள்ள நிலையில் அதனை யாருக்கு தரவேண்டும் என பேசி முடிவு செய்கிறார்கள். அப்பொழுது தினேஷ் மணிக்கு கொடுத்தா நல்லா இருக்கும் என்று தோணுது என கூற இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் மாயா விஷ்ணு என கூப்பிட்டு ஸ்டாரை வாங்குமாறு சைய்கையால் கூறுகிறார்.

இந்த நேரத்தில் கானா பாலா இந்த கோல்ட் ஸ்டார் மணிக்கு தருவதாக அறிவிக்க பூர்ணிமா, மாயா கடுப்பாகின்றனர். பிறகு மாயா பிராவோவிடம் யார காப்பாத்துறீங்க எதுக்கு அவனா காப்பாத்தணும். அவனுக்கு ஒரு ஸ்டார் போயிருக்கு அதனால காப்பாத்தப்படுறான் இதனால நல்ல பிளேயர் வெளியில போக சான்ஸ் இருக்கு. நீங்க ஒருத்தன சேவ் பண்ணனும்னு ஸ்டார் கொடுத்தா எனக்கு காண்டாகாதா. மணிய விட விக்ரம் பெட்டர் பிளேயர் என கூறுகிறார் மாயா.