ரஜினி ரசிகனாக இருந்து.. தளபதி ரசிகராக மாறிய அட்லீ.! இதோ அவரே கூறிய சுவாரசிய தகவல்

Atlee : இயக்குனர் அட்லீ இதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் படங்களாக மாறியதால் இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார். இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக உருவான ஜவான் திரைப்படம்..

வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எங்கும் ஓடியது படம். அதனால் வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடியது ஜவான் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து அட்லீயை பல டாப் நடிகர்களும் குறி வைத்து கதை கேட்டு வருகின்றனர்.

கருங்காலியால் காலியான லோகேஷ்… சிக்கிச் சின்னாபனமான சிவகார்த்திகேயன்.! அப்போ தனுஷ்..?

சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ கலந்து கொண்டார் அப்பொழுது நான் பல இடங்களுக்கு போய் வருகிறேன் பலரும் அஜித் உடன் எப்பொழுது இணைவீர்கள் என கேட்கிறார்கள் அஜித்திற்கு நான் நல்ல கதை ஒன்றை வைத்து இருக்கிறேன் அவர் ஓகே சொன்னால் படம் அதிரடியாக உருவாகும் என கூறினார்.

இப்படிப்பட்ட அட்லீ ஆரம்பத்தில் தலைவர் ரசிகன் பல மேடைகளில் சொல்லி வந்தார் ஆனால் தற்பொழுது நான் விஜய் அண்ணா ரசிகர் என கூறி வந்தார் இதற்கு பலரும் கமெண்ட் அடித்து வந்த நிலையில் தற்போது நான் விஜய் ரசிகராக மாறியது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்..

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த இரண்டு முன்னணி ஹீரோக்கள்.. கடைசியில் கமீட்டான விக்ரம் – அட இப்படியெல்லாம் நடந்து இருக்கா.?

நண்பன் படத்தில் நான் உதவி இயக்குனராக இருந்தேன்.. அப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் செய்யும் வேலைகளை விஜய் கவனித்து இருக்கிறார் படத்துடைய கடைசி நாள் ஷூட்டிங்கின் போது என்னை அவருடைய கேரவனுக்கு அழைத்து பாராட்டினார் அதோடு மட்டுமல்லாமல் எனக்கு ஒரு கதை ரெடி செய் என சொல்லி சப்ரைஸ் கொடுத்தார் அந்த தருணத்தில் இருந்து நான் விஜயின் தீவிர ரசிகராக மாறினேன் என கூறினார்.