லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

Lokesh kanagaraj: LCU உருவானது குறித்து உருவாகியுள்ள ஷார்ட் ஃபிலிம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் ஓடிடி ரைட்ஸ் பல கோடிக்கு விலை போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவில் யுனிவர்ஸை உருவாக்கி உள்ளார்.

மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து கார்த்திக்கின் கைது படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் வெற்றியினை பெற்றது இதனால் இவருடைய மார்க்கெட் உயர தொடர்ந்து அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

எந்த கொடியும், ஸ்டிக்கரும் பயன்படுத்தாமல் மக்களுக்கு உதவி செய்த நடிகர்.. புகழ்ந்து தள்ளிய பயில்வான்

அதன்படி கடந்த ஆண்டு கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்ற மாஸ் நடிகர்களின் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை சந்தித்தது. இதனை அடுத்து மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படம் சமீபத்தில் வெளியானது.

ஆனால் இப்படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு லோகேஷால் யூனிவர்ஸ் என்ற LCU உருவானது. இவ்வாறு தற்பொழுது லோகேஷ் ரஜினியின் தலைவர் 171வது படத்தினை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் கைது 2 படத்தினை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படமும் LCUவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதில் கார்த்தியின் பிளாஷ்பேக் என்ன என்பதை வெளிப்படுத்தும் வகையில் உருவாக உள்ளது மேலும் இதனை அடுத்து விரைவில் விக்ரம் 2 படத்தின் இரண்டாவது பாகத்தோடு LUC முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.

பிறந்த வீட்டு கஷ்டத்தை போக்க மண் மிதித்து வேலை செய்த மகா.. அதை வீடியோ எடுத்த கௌதம், சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இந்நிலையில் தற்பொழுது LCU உருவான விதத்தை ஷார்ட் ஃபிலிம் ஆக உருவாக்கியுள்ளார். இந்த படம் கைதி, விக்ரம் படங்களில் நடித்த நரேன் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது ஷார்ட் ஃபிலிம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஓடும் என சொல்லப்படுகிறதுm முதலில் இந்த படத்தை யூட்யூபில் வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் லோகேஷ்க்கு நல்ல மார்க்கெட் இருந்து வருவதனால் NETFLIX நிறுவனம் LCU ஷார்ட் ஃபிலிம் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி இந்த ஷார்ட் ஃபிலிம் 3 கோடி ரூபாய்க்கு விலை போய் உள்ளதாகவும் வருகின்ற ஜனவரி மாதம் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.