பிறந்த வீட்டு கஷ்டத்தை போக்க மண் மிதித்து வேலை செய்த மகா.. அதை வீடியோ எடுத்த கௌதம், சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode december 14 : இன்றைய எபிசோடில் மகா அப்பா அம்மா கஷ்டத்தை போக்குவதற்காக பிள்ளையார் சிலை செய்ய ஒரு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கு அதற்கு வேலை செய்ய வீட்டிற்கு வந்திருக்கிறார் ஆனால் தசாதரன் நீ இந்த மாதிரி வேலை செய்யறது உங்க வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்..

நீ போ மகா என்று சொல்ல மகா நான் அவர்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன், உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். பிறகு வேற வழியில்லாமல் தசாதரன் சரி வா என்று மகாவை சந்தோஷமாக கூப்பிடுகிறார். அடுத்து ராஜலட்சுமி சூர்யாவிடம் மகா எங்க என்று கேட்க அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல..

மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதனால அவங்க வீட்டுக்கு போய் இருக்கா என்று பொய் சொல்கிறார்.. பிறகு மகா, பிரபா, கோடீஸ்வரி, தசாதரன் எல்லோரும் சிலை செய்ய மண்ணு குழப்புகின்றனர்.. இதனை கௌதம் ஒரு ஆள் வைத்து வீடியோ எடுக்க சொல்லி இருக்கிறார் அவரும் அதனை படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு அந்த வீடியோவை கௌதம் இடம் அனுப்புனதும் கௌதம் சித்ராதேவி இடம் மகா அவங்க வீட்டுக்காக மண்குழப்பும் வீடியோவை காண்பிக்கிறார் பிறகு இருவரும் சேர்ந்து அதனை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்துவிட்டனர்.. பிறகு சித்ராதேவி டிவியை போட்டு அந்த வீடியோவை வைத்து அக்கா இங்க பாருங்க, மகா டிவில வரா என்று எல்லோரையும் கூட்டிட்டு காண்பிக்கின்றனர்.

ரவீனாவிற்கு சப்போர்ட் செய்ததால் பூர்ணிமாவிடம் சண்டை போடும் சூனியக்காரி.!

டிவியில் பிரபல தொழிலதிபர் விபி ஜுவல்லர்ஸ் ஓனர் வேதாச்சலத்தின் வீட்டு மருமகள் மகா பிறந்த வீட்டு கஷ்டத்திற்காக மண் வேலை செய்கிறார்.. என்று டிவியில் சொல்லுகின்றனர் இதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகின்றனர். பிறகு ராஜலட்சுமி அவ வரட்டும்  நேத்தே அவங்க அம்மா வீட்டுக்கு போனதால தான்..

பிரச்சனை ஆச்சி, இப்ப திரும்பியும் இப்படி பண்ணி இருக்கா அவதான் இந்த மாதிரி மீடியால போட்டு நம்மள அசிங்கப்படுத்தி இருப்பா என்று கோபத்தில் இருக்கின்றனர்.. அடுத்து விஜயும் பிரபாவும் ஒரு இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது ஒரு கடையில் இருந்த ஒருவர் வந்து உன் பெயர் விஜய்யா..

உன்கிட்ட ஒரு பொண்ணு பேசணும்னு எனக்கு போன் பண்ணி உன் கிட்ட குடுக்க சொன்னாங்க இந்தாப்பா பேசு என்று சொல்ல அந்த பெண் விஜய் இடம் என்னுடைய பெயர் கண்டுபிடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க போல என்று கேட்க விஜய் ஆமா உங்க பெயர் சொல்லுங்க எனக் கேட்பதற்கு என்னோட பெயர் ஒரு அர்த்தமில்லாத பெயர் அதுவும் உங்க ஒரு விரலுக்கு சம்பந்தமானது..

நீங்கதான் கவிஞனாச்சே அந்த பெயரை கண்டுபிடிங்க என்று சொல்ல அனாமிகா தானே உங்க பெயர் என்று உண்மையை கரெக்டாக கண்டுபிடித்து சொல்லிவிட்டார்.. உங்க போன் நம்பர் கொடுங்கள் என்று கேட்க அந்த அனாமிகா ஒன்பது நம்பரை சொல்லிவிட்டு ஒரு நம்பரை நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க என்று போனை வைத்து விட்டார்.. அடுத்து சூர்யா ஆபிஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ஒரு பெண் அங்கு வந்து இந்த வீடியோவை பாருங்கள் என்று மகா உடைய வீடியோவை காண்பிக்கிறார்.. பிறகு அந்த வீடியோவை பார்த்துவிட்டு சூர்யா மகா ஏன் இப்படி பண்றா என்று நினைக்கிறார் இத்தோட இந்த எபிசோடு முடிந்துள்ளது..