ரவீனாவிற்கு சப்போர்ட் செய்ததால் பூர்ணிமாவிடம் சண்டை போடும் சூனியக்காரி.!

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். நாளுக்கு நாள் தொடர்ந்து ஏராளமான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டான்ஸ் மாரத்தான் நடைபெறும் நிலையில் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்து வருகின்றனர். 

அப்படி நேற்று முழுவதும் தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் அருமையாக நடனமாடி கலக்கினார். இந்நிலையில் இந்த டாஸ்க்கின் பொழுது மாயா பூர்ணிமாவிற்கு இடையே சண்டை ஏற்பட்டு வருவதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் இருந்தே சூனியக்காரிகள் இருவரும் இணைந்து ஒருவரை டார்கெட் செய்து தாக்கி வந்தனர் ஆனால் தொடர்ந்து கமல் எச்சரித்து வந்ததால் தற்பொழுது அதனை கைவிட்டு உள்ளனர்.

தமிழை தர குறைவாக பேச நீங்க யார்.. சரியான நேரம் பார்த்து மெட்டிரியளுடன் தரமான பதிலடி கொடுத்த மேகனா.! தம்பி அர்ஜுனா உன் வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுக்கோ இனி..

இந்நிலையில் இந்த வாரம் பெரிதாக சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று மாயா பூர்ணிமாவிற்கிடையே சண்டை ஏற்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய முதல் ப்ரோமோவிலும் மாயா பூர்ணிமாவிற்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதாவது மாயா, ரவீனா இருவரும்  நடனம் ஆடுகின்றனர். இந்த நடனத்தைப் பார்த்த அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய கருத்தை கூறுகிறார்கள் அப்படி பூர்ணிமா ரவீனா புள்ள நல்ல ஆடுச்சு நிறைய இடத்துல நின்னு உங்களுக்குப் இடமும் கொடுத்தது.

மகளைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தை திருப்பும் கதிர்… யோவ் நீ பெத்த பிள்ளை தானே இது புருஷனை கண்டபடி ஏசும் நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல்

இந்தப் பாட்ட எந்த மாதிரி பண்ணனும்னு கரெக்டா பண்ணுன மாதிரி எனக்கு தோணுது எனக் கூறி விட பிறகு வெளியில் வந்தவுடன் மாயா பூர்ணிமாவிடம் கேட்க அதற்கு பூர்ணிமா அப்பனா எந்த பாயிண்ட்ட தான் சொல்றது. புரிஞ்சிக்காம எப்பவுமே இப்படிதான் பண்றீங்க. நான் ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன் அதை நீங்க மாத்தி விடுறீங்க என மாயா கூற நீங்க இத சொன்னதுக்கு அப்புறமா இத பத்தி இனிமே பேசுறதே வேஸ்ட் என கூறிவிட்டு கடுப்பில் பூர்ணிமா கிளம்பி விடுகிறார்.