தமிழை தர குறைவாக பேச நீங்க யார்.. சரியான நேரம் பார்த்து மெட்டிரியளுடன் தரமான பதிலடி கொடுத்த மேகனா.! தம்பி அர்ஜுனா உன் வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுக்கோ இனி..

thamizhum saraswathiyum today episode December 14 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் கோதை, நடேசன், வசு, சரஸ்வதி நான்கு பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது நாம் செய்த தவறுதான் தமிழ் இவ்வளவு கஷ்டப்படுகிறான் என கோதை பேசிக் கொண்டிருக்கிறார். அந்த அர்ஜுன் இவ்வளவு டார்ச்சர் கொடுப்பான் என்று நினைத்து கூட பார்க்கல என பேச அதற்கு வசு சரஸ்வதி அவ்வளவு சொன்னங்க நாம உஷாராக இருந்திருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்திருக்காது என பேசுகிறார்கள்.

அந்த அர்ஜுன் நம்ம வீட்ல உள்ளவங்க யாரும் நிம்மதியா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் தமிழ் மட்டும் நமச்சி வருகிறார்கள் . கம்பெனி முதலாளி தரகுறைவாக பேசியதை கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஆர்டர்ரை கேன்சல் செய்து விடுவேன் என சொல்லி விட்டார்கள். மேலும் யூனியன் ஆபீசுக்கு சென்றால் அதிகமாக காசு கொடுக்கிறார்கள் என நீங்கள் தான் மெட்டீரியலை வேறொரு கம்பெனிக்கு விற்று விட்டீர்கள் நீங்கள் எல்லாம் பஞ்சாயத்து பண்ண வந்து விட்டீர்களா என தமிழை கேவலமாக பேசி விட்டார்கள் என நமச்சி கூறுகிறார்.

அந்த நடிகரை அடைய நைட் பார்ட்டி வைத்த நடிகை.! அம்மா சென்றவுடன் முக்காடு போட்டுக் கொண்டு உள்ளே புகுந்த நடிகர்.. விடிய விடிய அரங்கேறிய காட்சி..

உடனே கோதை தமிழ் எப்பொழுது நியாயமாக நடந்து கொள்வான் எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கான் யூனியன் ஆபீஸ்க்கு அதெல்லாம் அவங்க மறந்துட்டாங்களா என பேசுகிறார்கள். அதேபோல் இரவு சரஸ்வதியிடம் தமிழ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வாழ்க்கையை வெறுத்தது போல் இருக்கிறது இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது எல்லாத்தையும் தூக்கி ஓரங்கட்டிட்டு இருக்க வேண்டியது தான் என பேசுகிறார்.

அதற்கு சரஸ்வதி தமிழுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார் அடுத்த காட்சியில் கோவிலுக்கு சென்று தமிழுக்காக சரஸ்வதி வேண்டிக்கொள்கிறார். அதேபோல் தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனிக்கு சென்று டைம் கேட்கிறார் ஆனால் அந்த கம்பெனி முதலாளி அதெல்லாம் முடியாது உங்களுடைய ஆர்டரை நான் கேன்சல் செய்கிறேன் என திட்டவட்டமாக கூறுகிறார் அந்த சமயத்தில் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஓடி வந்து நமக்கு டெலிவரி செய்ய வேண்டிய லாரி வந்துவிட்டது என கூறுகிறார்.

நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் அர்ஜுன் கண்ணில் மண்ணை தூவி சரக்கு வண்டியை எடுத்து வந்த மேகனா.! பிரமித்து போய் நிற்கும் தமிழ்.. சபாஷ் சரியான அடி..

அப்பொழுது தமிழிடம் தமிழ் நீங்க அந்த லாரியை கண்டுபிடிச்சிட்டீங்களா என அந்த ஓனர் கேட்கிறார் ஆனால் தமிழ் இது எப்படி நடந்துச்சு எனக்கே தெரியல வாங்க போய் பார்க்கலாம் அங்கு மேகனா லாரி எடுத்து வந்து நிறுத்தி தொலைந்து போன லாரி இதுதானா என கேட்கிறார். அதனைப் பார்த்து தமிழ் பிரமித்து போய் நிற்கிறார் அதுமட்டுமில்லாமல் அந்த கம்பெனி முதலாளிடம் மேகனா பேச தமிழிடம் அந்த ஓனர் சாரி கேட்கிறார் பிறகு தமிழ் மற்றும் மேகனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் மேகனாவை கட்டிப்பிடித்து நன்றியை கூறுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது இந்த லாரியை எப்படி எடுத்து வந்தார் என்பது நாளை எபிசோடில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? கடைசியில் சூப்பர் ஸ்டாருக்கு தெரிந்த உண்மை