பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி அடுத்தடுத்த திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிகாட்டி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது மூன்றாவது படம் படமான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய் வைத்து இயக்கியிருந்தார்.
இந்த படமும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் ஒரு சில காட்சிகள் கைதி படத்தின் காட்சிகளை வைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதனால் கைதி 2 மற்றும் விக்ரம் 2 உருவாக உள்ளது என்று கூறியிருந்தார்.
கைது படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி கேட்டிருந்த தற்போது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளதாக தகவல்கள் கார்த்தி அவர்கள் தற்போது கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கார்த்தி சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் சர்தார் படத்தின் பிரஸ்மீட்டில் பிஸியாக இருந்து வருகிறார்.
அப்போது கைது படத்தின் அப்டேட்டை கேட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது கைதி படத்தின் முதல் பாகம் படம் படபிடிப்பின் போது இரண்டாம் பாகத்தின் பாதி வேலைகள் முடிந்து விட்டதாக கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் இன்னும் 30 நாட்களில் கைது படத்தின் இரண்டாம் பாகம் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் கைதி படத்தின இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கார்த்தி அவர்கள் தெரிவித்திருந்தார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.