rithika-tamil360newz

பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ!! என்னம்மா இப்படி பண்றிங்களேமா எனக் கூறிய ரசிகர்கள்.

Video released by famous actress ritika singh: உலகம் முழுதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். இதை தொடர்ந்து அவர் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் தனது அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலை செய்து கொண்டு வருகிறார். அவர் துணி துவைக்கும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

 

Andrea-Jeremiah-tamil360newz

யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ஆண்ட்ரியா.!! யாருக்காக என்று பாருங்கள்?

Andrea posted a video of herself singing the song “You’re the Real Hero” :ஆண்ட்ரியா ஜெரிமியா இவர் ஆரம்ப காலத்தில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் நடிகையாக  நடித்து வருகிறார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை,  தரமணி போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பின்னணி பாடகியாக பாடி வருகிறார. இவரைப்பற்றி திரையுலகில் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் சில படங்களுக்கு நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

கொரோனா வைரஸின் காரணமாக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருந்த 70 போலீஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால்  அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது  கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் யூ ஆர் த ரியல் ஹீரோ என்ற பாடலை பாடி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/andrea_jeremiah/status/1260202193845657601?s=20

Salman_Khan-tamil360newz

வித்தியாசமான முறையில் நிவாரண பொருட்கள் வழங்கிய சல்மான் கான் – வைரல் வீடியோ!

Actor Salman Khan who provided relief goods in a different way:சல்மான் கான் ஹிந்தி பாலிவுட் நடிகர் ஆவார். இவர் தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் 1988ஆம் ஆண்டில்  பீவி ஹோ தோ ஐசி என்ற இந்தி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இதனை தொடர்ந்து மைனே பியார் கியா, சனம் பேவஃபா, குர்பான், லவ், சாஜன், சூரியவன்ஷி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து 1098ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வெளிவந்த குச் குச் ஹோத்தா ஹே என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

தற்போது சீனாவிலிருந்து உருவாகி உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரானா வைரஸ். இதனால் அன்றாட வேலை பார்த்து உண்ணும் தினம் கூலிகளுக்கு உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் ஏழை மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் சல்மான் கான் அவர்களும் உதவி வருகின்றார். அந்த வகையில் அவர்ருடைய பக்கத்து கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று கொடுத்து உதவி வருகிறார். இவருக்கு பல வகையான சமூக ஆர்வலர்களும் உதவி புரிந்து  வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர்களான கமல் கான், ஜாக்குலின், பெர்னாண்டஸ் ஆகியோர் இணைந்துள்ளனர்.அவ்வப்போது எடுத்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள் . அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.