பொன்மகள் சீரியலில் நடிக்கும் இவர்களுக்கு உண்மையில் திருமணமா!! கசியும் செய்தி

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி இதில் ஏராளமான நிகழ்ச்சிகளும் சீரியல்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபலமடைந்து சீரியல்களில் ஒன்று தெய்வம் தந்த வீடு ஆகும். இந்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அதுவும் முக்கியமாக இல்லத்தரசிகளுக்கும், இளம்பெண்களுக்கும் பிடித்ததாக விளங்குகிறது.

இந்த நாடகம் 2013ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த நாடகத்தில் விக்கி நடிகராகவும் இவருக்கு ஜோடியாக மேக்னா வின்சன்ட் அவர்களும் நடித்திருப்பார்கள்.இதனைத் தொடர்ந்து தற்போது பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் இருவரும் நடித்து வருகின்றனர்.

மேக்னா அவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு வருடம் மட்டும்தான் இருவரும் ஒன்றாக இருந்தனர் பின்பு மேக்னா அவர்கள் தன் கணவரிடம் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்டது.

இந்த நிலையில் இவருக்கு பொன்மகள் வந்தாள் சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் விக்கி இவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாம் இந்த நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது என தகவல்கள் வெளிவந்தது இதனை தொடர்ந்து தற்போது மேக்னா அவர்களும் விக்கியும் மிகவும் நெருக்கமாக பழங்கி வருகின்றனர் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதனைப் பற்றி இருவரும் கவலைப்படாமல்  இதனைப்பற்றி எதுவுமே கூறவில்லை.

Leave a Comment